என்ன கொடுமை.. இளைஞரை கொன்று போலீஸ் ஸ்டேசனில் தலையை வீசிய கொலையாளி கைது
கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் இளைஞர் தலையை வீசி சென்ற வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் : ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் இளைஞரின் தலையை வீசி சென்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் வினோத் என்பதாகும், முன் விரோதத்தில் சுவேதனை கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் பாகூரைச் சேர்ந்த சுவேதன், 17 ஒரு கொலை வழக்கில் தற்போது ஜாமீனில் வந்துள்ளார். இந்நிலையில் இன்று பாகூரில் உள்ள ஏரிக்கரையில் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வந்துள்ள சுவேதனை அடையாளம் தெரியாதவர்கள் கொலை செய்து உடலை அங்கேயே போட்டுவிட்டு தலையை இருசக்கர கொண்டு வந்து ரெட்டிச்சாவடி காவல் நிலைய வாசலில் தூக்கி எரிந்து விட்டு தப்பித்து சென்றனர்.

இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவானது. இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் போலீஸ் ஸ்டேசனுக்குள் தலைமைய வீசி சென்ற காட்சி பதிவாகியிருந்து. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
இதையடுத்து கடலூர் மாவட்ட எஸ்.பி.விஜயகுமார் தலைமையில் தீவிர விசாரணை நடந்து வந்தது. கொலை செய்யப்பட்டவரின் உடல் புதுச்சேரி மாநிலம் பாகூரில் கண்டெடுக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், சுவேதனை கொலை செய்த இரண்டு நபர்களில் ஒருவரான வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர். அதில் முன்விரேத காரணமாக சுவேதனை கொன்று விட்டு தலையை வீசிச்சென்றதாக வினோத் தகவல் அளித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications