தினகரனின் புதுவை காட்டு பண்ணை அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடிப்பு- ரவுடி படுகாயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நாட்டு வெடிகுண்டு வெடித்து ரவுடியின் கை துண்டானதால் பரபரப்பு- வீடியோ

  புதுவை: புதுச்சேரி பொம்மையார்பாளையத்தில் சுனாமி குடியிருப்பில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த போது வெடித்த விபத்தில் ரடிவு ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுவையில் தினகரனின் காட்டு பண்ணை இருக்கும் பொம்மையார்பாளையத்தில்தான் இந்த சுனாமி குடியிருப்பு உள்ளது.

  நாடு முழுவதும் வருமான வரி சோதனை நடத்திய அதிகாரிகள் வெளி உலகம் அறியாத தினகரனின் புதுவை பொம்மையார் பாளையம் காட்டு பண்ணைக்குள்ளும் சோதனை நடத்தினர். இந்த பண்ணை வீட்டுக்குள் செல்வதற்கான பாதையே படு பயங்கரமானதாக இருக்கும்.

  One critically injured in Puducherry blast

  அடித்து தூக்கிப் போட்டால்கூட அரவம் கேட்காது; வெளி உலகத்துக்கும் தெரியாது என்கிற அளவுக்கு அலறவைக்கும் ஒரு ரகசிய பண்னையாக இருந்தது. இந்த பண்ணை தொடர்பாக தினகரன் பதற்றத்துடன் செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்திருந்தார்.

  இப்பண்ணை வீட்டில்தான் வைர நகைகள், ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதே பொம்மையார்பாளையம் சுனாமி குடியிருப்பில் இன்று வீடு ஒன்றில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ரவுடி ஒருவர் படுகாயமடைந்திருக்கிறார்.

  வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்த போது அது வெடித்ததாகவும் இதில்தான் ரவுடி படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ரவுடிகள் சுனாமி குடியிருப்பதில் ஏன் பதுங்கியிருந்தனர்? இவர்கள் பதுங்கியிருந்ததற்கு வேறு காரணம் இருக்கிறதா? என்கிற கோணத்திலும் போலீசார் துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A youth was badly injured while he was allegedly making bombs in a house at Puducherry bommayapalayam.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற