சூரியன் உதித்ததில் இருந்து மறையும் வரை.. கலைஞர் கருணாநிதியின் ''ஒருநாள்'' என்ன தெரியுமா?
திமுக தலைவர் கருணாநிதியின் மிகவும் திட்டமிட்டு தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்தார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மிகவும் திட்டமிட்டு தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்தார். முதல்வராக இருந்த போதும், இல்லாத போதும் தன்னுடைய ஒருநாளை அவர் மிகவும் திட்டமிட்டு கழித்தார்.
இந்த நேரத்தில் இதுதான் செய்ய வேண்டும் என்று சரியாக பட்டியலிட்டு அவர் பணிகளை செய்வார். மோசமான எண்ணங்களை நினைப்பதை விரும்பாத கருணாநிதிக்கு இந்த திட்டமிடல் பெரிய அளவில் உதவியது.

வயது முதிர்ச்சி காரணமாக தற்போது அவர் மரணம் அடைந்து இருக்கிறார். அவர் ஒருநாள் எப்படி என்று நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
திமுக தலைவர் கருணாநிதி அதிகாலை, 5 மணிக்கே எழுந்து கொள்ளும் வழக்கம் உடையவர்.
அதன்பின் காலை கடன் உட்பட அனைத்து பணிகளையும் 5.45 மணிக்குள் முடித்துக் கொண்டு தயாராகி விடுவார்.
அதன்பின் முதல் வேலையாக அவர் செய்தித்தாள்கள் படிப்பார். செய்தி சேனல்கள் வந்த பின்பும் கூட அவர் தமிழகத்தில் கிடைக்கும் தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்கள் அனைத்தையும் படிப்பார்.

செய்தித்தாள் படித்த பின், தனக்கு வந்த கடிதங்களை படிப்பார். பின் அந்த கடிதங்களுக்கு அவர் பதில் எழுதும் பணியை செய்வார். இந்த பணியின் போது அவருக்கு உதவியாக, அவரது தனிச் செயலர் ஷண்முக சுந்தரம் இருப்பார்.
கடிதங்கள் அனுப்பிய பின் வாழ்த்து செய்தி அனுப்பும் பணியை செய்வார். பிறந்த நாள் வாழ்த்து , திருமண வாழ்த்து என்று அன்றைய நாளின் சிறப்பை வைத்து அவர் வாழ்த்து கடிதம் அனுப்புவார்.
அதன்பின், அவர்கள் வீட்டு வாசலில் அனுமதி பெற்று காத்திருக்கும், கழக உடன்பிறப்புகள் அவரை சந்திப்பார்கள். வரிசையாக தன்னை பார்க்க வந்தவர்க்களுடன் பேசி, உரையாடுவார்.
அதன்பின் அவர் காலை உணவு சாப்பிடுவார். பெரும்பாலும் இட்லி, இடியாப்பம் உள்ளிட்ட மிகவும் மெருதுவான உணவுகளை மட்டுமே சாப்பிடுவார்.
அதன்பின் அவர் நேரடியாக கார் மூலம் அறிவாலயம் சென்று கட்சி பணிகளை தொடங்குவார். அங்கு இருக்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருடன் உரையாடுவார்

இங்குதான் ஆட்சி குறித்தும், தமிழகம் குறித்தும், தேர்தல் குறித்தும் முக்கியமான உரையாடலை நிகழ்த்துவார். முக்கியமாக இங்கு இருந்து சமயங்களில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பும் நடத்துவார்.
அங்கிருந்து நேரடியாக மதிய உணவு சாப்பிட அவர் வீட்டிற்கு செல்வார். அவருக்கு கோபாலபுரம் வீட்டில் எப்போதும், மதியம் சரியாக 1 மணிக்கு உணவு தயாராகி இருக்கும். பெரும்பாலும், மீன் உள்ளிட்ட அசைவ உணவுகள் தயாராக இருக்கும்.
உணவுக்கு பின் அவர் குட்டி துக்கம் தூங்கிவிட்டு, பின் மீண்டும் பணிக்கு திரும்புவார். பின் மீண்டும் கட்சி பணியை கவனிக்க சென்றுவிடுவார். பின் அன்று மாலை வந்த செய்தித்தாள்களை அவர் படிப்பார்.
இந்த நேரத்தில்தான் அவர் கட்டுரை எழுதுவது, வசனம் எழுதுவது, என்று கலைப்பணிகளை செய்வார். செய்தித்தாள்களுக்கு கட்டுரைகள் அனுப்புவதும் இதே நேரத்தில் செய்வார்.
இந்த பணியை முடித்ததும் மீண்டும் அவர், அறிவாலயம் செல்வார். அங்கு மீண்டும் அவர் கட்சி தொண்டர்களையும் செயலாளர்களையும் சந்திப்பார். அங்கு முக்கியமான தமிழக நடப்பு குறித்து விவாதம் செய்வார்.
அதற்கு பின் அவர் மீண்டும் செய்தி நிகழ்ச்சிகளை பார்க்க சென்று விடுவார். புதிய விவாத நிகழ்ச்சிகள் சிலவற்றை அவர் பார்க்கும் வழக்கம் கொண்டு இருந்தார்.
அதேபோல் சமூக வலைத்தளங்களில் நடக்கும் நிகழ்வுகளை கேட்டு தெரிந்து கொள்வார். தன்னுடைய சமூக வலைதள அட்மீன்களை சந்தித்து உரையாடுவார்.
அந்த சமயத்தில் அவருடன் அன்பழகன், துரைமுருகன், ஆ ராசா, ஸ்டாலின் ஆகியோர் இருப்பார்கள். இந்த விவாதம் பெரும்பாலும் சுவரசியமாக இருக்கும்.
அதன்பின்தான் அவர் இரவு உணவு சாப்பிடுவார்கள். பெரும்பாலும் 9 மணியில் இருந்து 10 மணிக்குள் அவர் இரவு உணவு சாப்பிடுவார். அதன்பின் மீண்டும் அரசியல் விவாதம் சில நடத்துவார்.
பெரும்பாலும் 7 மணி நேரம் தூங்கும் வழக்கத்தை கருணாநிதி கொண்டு இருந்தார்.முதல்வராக இருந்த சமயத்தில் வேறு மாதிரியான காலத்திட்டத்தை வைத்து இருந்தார்.












Click it and Unblock the Notifications