பாலமேடு ஜல்லிக்கட்டு: கேலரியில் அமராமல் வேடிக்கை பார்த்தவர் மாடுமுட்டி உயிரிழப்பு
பாலமேடு ஜல்லிக்கட்டில் கேலரியில் அமராமல் வீதியில் நின்று வேடிக்கை பார்த்தவர் மாடு முட்டி உயிரிழந்தார்.
மதுரை: மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கேலரியில் அமராமல் வீதியில் நின்று வேடிக்கை பார்த்த ஒருவர் மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான காளைகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

வாடிவாசலில் இருந்து சீறிய காளைகளை அடக்கிய இளைஞர்கள் சிலர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்கவும் ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர்.
இவர்கள் பார்வையிடுவதற்காக தடுப்புகளுடன் கூடிய கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கேலரியில் அமராமல் ஆர்வத்தினால் மாடுகள் வெளியே சென்று சேருமிடத்தில் நின்று வேடிக்கை பார்த்த சிலருக்கும் மாடுகள் முட்டியதில் காயம் ஏற்பட்டது.
இதில் திண்டுக்கல் சாணார்பட்டியைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் படுகாயமடைந்தார். அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications