நாகை அருகே வயலில் பேருந்து கவிழ்ந்து விபத்து- ஒருவர் பலி; 40 பேர் படுகாயம்

நாகை மாவட்டம் பொறவச்சேரியில் வயலில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Subscribe to Oneindia Tamil

நாகை: நாகை அருகே பொறவச்சேரியில் வயலில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பேருந்தில் இருந்த 40 பயணிகள் காயமடைந்துள்ளனர். பேருந்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர், போலீசார் ஈடுபட்டனர்.

One dead 40 injury in a bus accident

காலை நேரம் என்பதால் ஏராளமான பள்ளி மாணவர்களும் அரசுப் பேருந்தில் பயணம் செய்தனர். வேகமாக வந்த பேருந்து நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த வயலில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த அனைவரும் பேருந்துக்குள் சிக்கி கூக்குரலிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் அனைவரையும் மீட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பபட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பகோணம் அருகே மினி பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயமடைந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+