சிவகாசி: பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி
சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டையை அடுத்த சூரார்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான அணில் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் இன்று காலையில் வழக்கமாக தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென வெடிச்சத்தம் கேட்டது. இதனால் ஆலையில் உள்ள ஒரு அறை இடிந்து விழுந்தது. இதில் அந்த அறையில் இருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.
இந்த விபத்தில் 36 வயதான வி.சபரிமலையான் என்ற தொழிலாளி பலியானார். உயர்ரக பேன்ஸி பட்டாசுகளை தயாரிக்கும் போது இந்த விபத்து எற்பட்டுள்ளது.

வெடி விபத்து குறித்து தகவல் தெரிந்த உடன் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.என்.ஹரிஹரன் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
சிவகாசி வெடிவிபத்து வீடியோ
<center><img style="-webkit-user-select:none;border:0px;" border="0" width="600%" height="450" src="http://web.ventunotech.com/beacon/vtpixpc.gif?pid=2&pixelfrom=jp" /><div id="vnVideoPlayerContent"></div><script>var ven_video_key="NTI3NDEwfHwyfHwxfHwxLDIsMQ==";var ven_width="100%";var ven_height="417";</script><script type="text/javascript" src="http://web.ventunotech.com/plugins/cntplayer/ventuno_player.js"></script></center>
சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. கடந்த 2012ம் ஆண்டு சிவகாசி முதலிப்பட்டியில் நடந்த மிகப்பெரிய வெடி விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications