கோவை மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது குண்டு வீசிய வழக்கு... விஎச்பி தொண்டர் கைது
கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை: கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை காந்திபுரத்தில் உள்ள 100 அடி சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த ஜூன் 17ம் தேதி அதிகாலையில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் பெரிய அளவில் சேதம் ஏதும் இல்லை என்றாலும் சிபிஎம் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காந்திபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கேரளத்தில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தின் மீது கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என்று தெரிய வந்துள்ளது.
குண்டுவீச்சு சம்பவத்தில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளதையடுத்து அவரை பிடிக்க தனிப்படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சரவணக்குமார் விஷ்வ ஹிந்து பரிஷத்தில் உறுப்பினராக இருப்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட சரவணக்குமாரை நேற்று நள்ளிரவில் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications