ஓபிஎஸ் அரசியலை விட்டு விலகாமல் துணிச்சலுடன் போராட பேராதரவு- கருத்து கணிப்பில் ஒன் இந்தியா வாசகர்கள்
ஓ பன்னீர்செல்வம் அரசியலை விட்டு விலகாமல் மன்னார்குடி கோஷ்டியுடன் துணிச்சலுடன் போராட வேண்டும் என ஒன் இந்தியா தமிழ் கருத்து கணிப்பில் பெரும்பான்மையோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அரசியலைவிட்டு விலகாமல் தொடர்ந்து துணிச்சலுடன் போராட வேண்டும் என்று ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்..
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து மத்திய அரசின் ஆதரவுடன் முதல்வரானார் ஓ. பன்னீர்செல்வம். ஆனால் மன்னார்குடி கோஷ்டி ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து முதல்வராக செயல்படவிடாமல் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
சசிகலாவை முதல்வராக்குவதற்காக பன்னீர்செல்வத்திடம் இருந்து ராஜினாமா கடிதத்தை வாங்கி வைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மன்னார்குடி கோஷ்டியின் தொடர் நெருக்கடிகளால் அரசியலைவிட்டு பன்னீர்செல்வம் ஒதுங்கவாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் "அரசியலைவிட்டு ஓபிஎஸ் விலகலாமா? நீடிக்கலாமா?" என்ற தலைப்பில் கருத்து கேட்டிருந்தோம். இதில் வாசகர்கள் தெரிவித்த முடிவுகள் விவரம்:

அரசியலைவிட்டு விலகலாம்
ஒன் இந்தியா கருத்து கணிப்பில் மொத்தம் 11,737 பேர் பங்கேற்றனர். இவர்களில் 25.91% ஓபிஎஸ் அரசியலைவிட்டு விலகலாம் என கூறியுள்ளனர். அதாவது 3,041 பேர் ஓபிஎஸ் அரசியலைவிட்டு விலகலாம் என்கின்றனர்.

விலக கூடாது
அரசியலைவிட்டு ஓபிஎஸ் விலக கூடாது என்ற கருத்தை 6.36% பேர் முன்வைத்துள்ளனர். மொத்தம் 746 பேர் இந்த ஆப்சனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

துணிச்சலுடன் போராட வேண்டும்
அதே நேரத்தில் ஓபிஎஸ் துணிச்சலுடன் போராட வேண்டும் என்ற ஆப்சனுக்கு மிகப் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. மொத்தம் 53.22% பேர் ஓபிஎஸ் மன்னார்குடி கோஷ்டியை எதிர்த்து போராட வேண்டும் என்ற ஆதரவை தெரிவித்துள்ளனர். கருத்து தெரிவித்த 11,737 பேரில் 6,246 பேர் இந்த ஆப்சனை ஆதரித்துள்ளனர்.

மத்திய அரசு இருக்க பயமேன்
மத்திய அரசு இருக்க பயமேன் என்ற ஆப்சனுக்கும் கணிசமான ஆதரவு கிடைத்துள்ளது. 14.52% வாக்குகள் இதற்கு கிடைத்துள்ளது. மொத்தம் 1,704 வாக்குகள் இந்த ஆப்சனுக்கு கிடைத்திருக்கிறது.
ஆக மொத்தம் ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்து மன்னார்குடி கோஷ்டியை எதிர்த்து துணிச்சலுடன் போராடினால் மக்கள் பேராதரவு கிடைக்கும் என்பதையே இக்கருத்து கணிப்பு வெளிப்படுத்துகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications