அப்பல்லோவில் உம்மன் சாண்டி.. ! #jayalalithaa
சென்னை: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து அவர் விசாரித்து விட்டுச் சென்றார்.
முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் குறித்து பல்வேறு தலைவர்களும் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்து விசாரித்துச் செல்கிறார்கள். கேரள முதல்வர் பினரயி விஜயன் சமீபத்தில் வந்து சென்றிருந்தார். இந்த நிலையில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி இன்று அப்பல்லோவுக்கு வந்தார்.

மருத்துவமனைக்குள் போய் விட்டுத் திரும்பிய உம்மன் சாண்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக வந்தேன். நான் மருத்துவமனையில் டாக்டர்களைச் சந்தித்தேன். தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், விஜயபாஸ்கர், லோக்சபா துணைத் தலைவர் தம்பித்துரை உள்ளிட்டோரைச் சந்தித்தேன்.

முதல்வரின் உடல் நலம் நல்லபடியாக முன்னேறி வருவதாக அவர்கள் தெரிவித்தனர். விரைவில் அவர் குணமடைவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். நானும் தமிழக முதல்வர் விரைவில் குணமடைந்து பணிகளுக்குத் திரும்ப வேண்டிக் கொள்கிறேன் என்று கூறினார் உம்மன் சாண்டி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications