கனமழையால் ஊட்டி மலை ரயில் சேவை பாதிப்பு- பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை!
ஊட்டி : நீலகிரியில் பெய்து வருகின்ற கனமழை காரணமாக ஊட்டி-குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
அருவங்காடு பகுதியில் தண்டவாளத்தில் மண் சரிந்து விழுந்த காரணத்தினால் மலை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சரிவுகள் அகற்றப்பட்ட பின்னரே மீண்டும் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர் கனமழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குன்னூரில் இருந்து வரும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக இயக்கப்படுகின்றன. மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஒருவழிப் பாதையாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரியிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications