ஊட்டியில் காலையிலயே கொளுத்துது வெயில்.. யாரும் ஸ்வெட்டர் கூட போடல.. புழுக்கத்தில் வதைபடும் நீலகிரி
ஊட்டி: கோடை வெயில் மண்டையை பிளந்துவரும்நிலையில், ஊட்டியிலும் அனல் கொளுத்துகிறது.. இதுவரை இல்லாத அளவுக்கு, வெப்பநிலை பதிவாகி சாதனை படைத்திருக்கிறது ஊட்டி.
நாட்டின் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசிக்கொண்டிருக்கிறது.. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்தவாறு காணப்படுகிறது..

கோடை வெயில்: இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தே வருகிறது.. கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அலர்ட் செய்திருந்தது.
அதிகளவில் தண்ணீர் பருகுமாறும், வெயிலில் தேவையில்லாமல் நடமாட வேண்டாம் என்றும் வானிலை மையமும், சுகாதாரத்துறையும் அறிவுறுத்தி கொண்டேயிருக்கின்றன.. ஆனாலும் சமாளிக்க முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கிறது.. எனவே, ஒவ்வொரு பகுதிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டும் வருகிறது.
தமிழகம்: தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தி கொண்டிருக்கிறது.. அதுவும், கிட்டத்தட்ட 15 இடங்களில் நேற்றைய தினம் வெயில் சதம் அடித்திருக்கிறது.. இதில் கடந்த வாரம் முதல் இப்போது வரை டாப்பில் உள்ளது ஈரோடு மாவட்டம்தான்..
நேற்றுகூட, அதிகபட்சமாக ஈரோட்டில் 107 டிகிரி வெயில் பதிவாகியிருக்கிறது.. சென்னையில் 101 டிகிரி வெப்பமும் பதிவாகியிருக்கிறது. திருப்பத்தூர் - 106.52, தருமபுரி - 106.16, வேலூர் - 105.98, திருத்தணி - 105.08, கரூர் பரமத்தி - 104.36, சேலம் - 104.18, மதுரை விமான நிலையம் - 103.28 என பதிவாகி உள்ளது.
கலக்கம்: இதில் பெரிதும் அதிர்ச்சியை தரக்கூடியது நீலகிரி மாவட்டம்தான்.. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெயில் தாங்காமல் ஊட்டிக்கு படையெடுத்து வருகிறார்கள் சுற்றுலா பயணிகள்.. ஆனால், ஊட்டியிலேயே வெயில் கொளுத்துவது அதிர்ச்சியையும், கலக்கத்தையும் தந்து கொண்டிருக்கிறது.. ஊட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பம் பதிவாகி உள்ளது.
நேற்று அதாவது ஏப்ரல் 28ம் தேதி, உதகையில் வெப்பம் 29 செல்ஷியஸ் ஆக பதிவாகியிருக்கிறது.. இது வழக்கத்தை விட 5.4 டிகிரி செல்ஷியஸ் அதிகம் ஆகும். 1951க்கு பிறகு இப்போதுதான், அதாவது 73 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் வெயில் அதிகமாம்.. 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஊட்டியில் வெப்பநிலை பதிவாகியிருப்பது, நீலகிரி மக்களை மட்டுமல்லாமல் தமிழக மக்களுக்கே அதிர்ச்சியை தந்து வருகிறது.
வெப்பநிலை: ஏப்ரல் மாதங்களிலே அதிகபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளது ஊட்டி.. 1951ம் ஆண்டிலிருந்து இதுவரை இல்லாத வெப்பமான நாளுக்கான இன்னொரு சாதனையையும் ஊட்டி நடத்தியிருக்கிறது...
ஊட்டியைபோலவே, கிட்டத்தட்ட ஜில் கிளைமேட் கொண்ட பெங்களூரிலும் வெயில் கொளுத்தி வருகிறது.. பாலக்காடு போன்ற இடங்களிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இன்னும் கத்திரி வெயிலே ஆரம்பிக்காத நிலையில், வாட்டி வதைக்கும் வெப்பத்தை பார்த்து கலங்கி போயுள்ளது தமிழகம்..
ஓட்டல்கள்: நீலகிரி மாவட்டமே சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.. ஓட்டல்கள், ரிசார்ட்கள், லாட்ஜ்கள் என மொத்தமும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது.. இன்னும் கோடை விழா துவங்கப்படாத நிலையில், ஊட்டிக்கு படையெடுப்போரின் எண்ணிக்கை இப்போதே அதிகரித்துவிட்டது..

சாலைகளில் எங்கு பார்த்தாலும், வாகனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.. பயணிகள் வருகையினால், ஓட்டல்களில் மின்சப்ளையும் சீராக உள்ளது.. கரண்ட் பிரச்சனை ஏற்படாதவாறு, மாவட்ட நிர்வாகமும் அனைத்தையும் சமாளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், இதை கட்டுப்படுத்துவதற்காக, குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையை ஒரு வழிப்பாதை யாக மாவட்ட நிர்வாகம் மாற்றியமைத்திருக்கீறது.. ஊட்டிலிருந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி வழியாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி வரும் வாகனங்கள் குன்னூர், பர்லியாறு வழியாகவும் என ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகரித்துள்ளதால், மலைப் பாதையில் வாகனங்கள் அணிவகுத்தே நிற்கின்றன.
கோரிக்கை: குறிப்பாக, காலையில் 6 மணி முதல் 8 மணி வரை வாகன நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.. இதனால், உள்ளூர் மக்களும் பெரிதும் அவதிக்கு ஆளாகின்றனர்.. உள்ளூர் மக்களின் வாகனங்களும் திருப்பிவிடப்படுவதால், அவர்களும் சிரமத்துக்கு ஆளாகி விடுகிறார்கள்.. எனவே, உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முறை சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக, 2 அரை டன் வண்ண கூழாங்கற்களை கொண்டு வன விலங்குகளின் உருவங்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.. அதேபோல, தாவரவியல் பூங்கா மட்டுமின்றி, ரோஜா பூங்காவிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications