மாயமான விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரான சுபாஷ் சுரேஷ் தமிழகத்தைச் சேர்ந்தவர்!

Subscribe to Oneindia Tamil

புதுவை: ஆபரேஷன் ஆம்லா ஒத்திகைக்கான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது மாயமான டார்னியர் ரக விமானத்தில் பயணம் செய்த மூன்று விமானிகளில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த சுபாஷ் சுரேஷ் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சுபாஷ் சுரேஷ் திசைகாட்டி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சுபாஷுடன் பயணித்த விமானி வித்யாசாகர் ஆந்திராவைச் சேர்ந்தவர். துணை விமானி சோனி மத்திய பிரதேசம், போபாலைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Operation Amla flight tragedy – one of the three is from Chennai

மூன்று பேரும் விமானத்தை இயக்குவதில் திறன் படைத்தவர்கள் என கடலோர பாதுகாப்பு படையின் ஐஜி எஸ்.பி.ஷர்மா தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து "ஆபரேஷன் ஆம்லா" என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகைகள் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அம்லா ஒத்திகையை நடத்துவதாக இருந்தது. விமானம் மாயமான தகவல் கிடைக்கவே அம்லா பாதுகாப்பு ஒத்திகையை கடலோர காவல் படையினர் ரத்து செய்தனர்.

காணாமல் போன விமானத்தில் பயணித்த அதிகாரிகளின் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், தேடுதல் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டால் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்படும் என கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+