சட்டசபைத் தேர்தல்ல திமுகதான் ஜெயிக்குமாம்.... "ஆவி" பறக்க ஒரு கருத்துக் கணிப்பு...!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சி ஜெயிக்கும் என ஆளாளுக்கு கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். பலர் ஆருடமும் சொல்லி வருகின்றனர்.
ஆனால் இவர்களில் இருந்து வேறுபட்டு, என் வழி தனி வழி என வித்தியாசமாக கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளார் ரமணி என்ற நபர். அதாவது கருத்துக் கணிப்பில் இவர் ரொம்பவே "மேலே" போய் விட்டார்!
கருத்துக்கணிப்பில் அப்படி என்ன வித்தியாசம் என்கிறீர்களா... இருக்கிறதே. இந்த ரமணி ஆவி உலக ஆராய்ச்சியாளர். சோ, இவர் கருத்துக்கணிப்பு நடத்தியிருப்பது சாத்சாத் ஆவிகளிடமே தான். ஆவிகளிடம் கருத்துக் கேட்டு அனல் பறக்கை அதைச் சொல்லியுள்ளார்.

ஆவிகளிடம் கருத்துக்கணிப்பு...
நாகை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் இந்த ரமணி. இவரிடம் விகடன் வீடியோ பேட்டி எடுத்துள்ளது. அதில் தான் நேரடியாக இந்தக் கருத்துக்கணிப்பை செய்து( நடித்து?) காட்டியிருக்கிறார் ரமணி.

டெரர் ஆரம்பம்...
ஆரம்ப காட்சிகளில் பில்டப் அல்லோகலப்படுகிறது. பின் 2016 சட்டசபைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என ஆவிகளின் கருத்து என்ன எனக் கேட்போம் என மெதுவாக டெரர் சீனை ஆரம்பிக்கிறார்.

சொல்லுங்க பிரியா...
முதலில் சாதாரண பொதுமக்கள் ஆவியிடம் இருந்து தனது பேட்டியை ஆரம்பிக்கிறார் ரமணி. திருநள்ளாரைச் சேர்ந்த இந்தப் பிரியா 11.05.2001 அன்று உயிரிழந்தவராம் (அப்போ ஓட்டு போட்டுட்டுத் தான் செத்துருப்பாங்க போல..)

பேய்க்கு ஓட்டு...
இவர் கட்டாயம் இந்தத் தேர்தலில் அதிமுகவிற்குத் தான் ஓட்டுப் போடுவாராம்( பயந்து வருதே... பேயெல்லாம் ஓட்டுப் போட வருமாமே... எந்தப் பூத்துனு சொல்லுங்கப்பா... நாங்க அந்தப்பக்கமே வரமாட்டோம்)

எம்.ஜி.ஆர்...
அடுத்ததாக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஆவியுடன் பேசுவதாக சொல்கிறார் ரமணி. ஜெயலலிதாவை திட்டியபடி திமுக தான் ஜெயிக்கும் என எம்.ஜி.ஆரின் வாய்சில் பேசுகிறார்.

அண்ணாவுடன்...
எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து அறிஞர் அண்ணாவுடன் பேசுகிறார் ரமணி. அவரும் திமுக தான் ஜெயிக்கும் என்கிறார். கடைசியில் வாழ்க வளமுடன் என்று வேறு பேசி முடிக்கிறார்.

என்னா பெர்பாமன்ஸ்...
இப்படியாக ஒவ்வொரு பேட்டியும் அமைந்துள்ளது. ஆனால், ஒவ்வொரு முறையும் ஆவியுடன் பேசிய பின்னர் லைட்டாக மயக்கம் போடுவது போல் சுவற்றில் சாய்ந்து, பின் அவரே சுதாரித்து எழுந்து கொள்கிறார் ரமணி. ( நடிகன்டா...)
அவசரப்பட்டுடாதீங்க...
நிச்சயம் இந்த வீடியோவைப் பார்ப்பவர்களுக்கு சிரிப்பு கன்பார்ம். ஆனால், இந்த வீடியோ மூலம் ரமணி தரும் மெசேஜ் என ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். அதாவது, ‘அவசரப்பட்டு இறந்தவர்கள் பெயர்களை வாக்காளர்கள் பட்டியல்ல இருந்து எடுத்துடாதீங்க. பாருங்க ஆவிங்கள்லாம் ஓட்டுப்போட வருதாம். பேசாம தபால் ஓட்டு மாதிரி, ஏதாவது தனிப்பிரிவுகள்ல ஆவிங்களுக்கும் ஓட்டு போட உரிமை தாங்களேன்...'
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications