கருத்துக்கணிப்பு முடிவுகள் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்: சொல்வது யார் தெரியுமா?
சென்னை: தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி இணையதளம் மூலம் வாக்காளர்களுடன் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 1,700 அரசியல் கட்சிகளில் 150 தான் தேர்தலில் போட்டியிடுகின்றன. தேர்தலில் போட்டியிடாமல் இருக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.
அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதில் தேர்தல் ஆணையம் மிகவும் கவனமாக நடந்துள்ளது. மாற்றப்பட்ட அதிகாரிகளுக்கு பதில் புதிய அதிகாரிகள் உடனுக்குடன் பணியமர்த்தப்பட்டதில் இருந்து தமிழக அதிகாரிகள் குறித்து தேர்தல் ஆணையம் தீவிர ஆய்வு செய்துள்ளது தெரிகிறது.
தேர்தல் அதிகாரிகள் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து நடத்தி வரும் சோதனைகளால் பெரிய தாக்கம் ஒன்றும் ஏற்படாது. தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வாக்காளர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதிலும் குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்களிடத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, கருத்துக்கணிப்புகளை கட்டுப்படுத்த வேண்டும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் துல்லியமாக இருக்கும். அதனால் அதுவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.












Click it and Unblock the Notifications