ஜான்பாண்டியன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதற்கு எதிர்ப்பு.. 12 பேருந்துகள் மீது தாக்குதல்
தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் பல பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Recommended Video

நெல்லை: தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் பல பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நெல்லையில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் வீட்டில் இரண்டு நாட்கள் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.நெல்லை பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகரில் உள்ள அவரது வீட்டில் குண்டு வீசப்பட்டது.

இரண்டு பேர் பைக்கில் வந்து குண்டை எறிந்துவிட்டு தப்பித்து சென்று இருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மாநில இளைஞர் அணி தலைவர் கண்ணபிரான் என்ற நபர் நேற்று போலீசால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஜான்பாண்டியனின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் பல பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக, 12 பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டது.

இதனால் பெரும்பாலான வெளியூர் செல்லும் பேருந்துகள் சேதம் அடைந்தது. இதனால் அங்கு பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications