அரசு ஊழியர் போராட்டம் விவகாரம்: சட்டசபையில் இருந்து திமுக, தேமுதிக, பாமக, இடதுசாரிகள் வெளிநடப்பு
சென்னை: தமிழக சட்டசபையில் அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததைக் கண்டித்து திமுக, தேமுதிக, பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இடைக்கால பட்ஜெட்டை நேற்று நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து வெளிநடப்பு செய்தனர்.
இன்று காலை சட்டசபை கூடியபோது இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் போராட்டங்கள் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று திமுக, தேமுதிக, பாமக, புதிய தமிழகம் மற்றும் இடதுசாரி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் இதற்கு அனுமதி அளிக்கவில்லை.

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
இதனைத் தொடர்ந்து அனைத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களும் கூண்டோடு ஒட்டுமொத்தமாக அடுத்தடுத்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுகவின் துரைமுருகன் கூறியதாவது:

அனுமதிக்காத சபாநாயகர்
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையை சட்டசபையில் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச முயற்சிக்கும் போதெல்லாம் சபாநாயகர் பேச அனுமதிப்பது இல்லை. இது ஜனநாயகத்துக்கு எதிரானது.

அரசு ஊழியருக்கு எதிரான அரசு
அரசு ஊழியர்களுக்கு எதிராக இருந்த எந்த அரசும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. அதை தெரிந்து கொண்டுதான் இவர்கள் மெத்தனமாக இருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் பிரச்சனை குறித்து பேச அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்தோம் என்றார்.

காடுவெட்டி குரு ஆஜர்
ஜெயங்கொண்டம் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு கடந்த ஒரு ஆண்டுக்குப் பின்னர் இன்று சட்டசபைக்கு வந்து சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இது குறித்து அவர் கூறுகையில், சட்டசபையில் பேச வாய்ப்பு எங்கே தருகிறார்கள். இதனால்தான் பங்கேற்கவில்லை என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications