கோயில்களை புதுப்பிக்க ரூ.90 கோடி… வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.15 கோடி மட்டுமே!
Subscribe to Oneindia Tamil
சென்னை: 250 பழமையான கோயில்களை புதுப்பிக்க ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள ஓ.பன்னீர்செல்வம் அரசு, வேலையில்லா பட்டதாரிகள் வேலைவாய்ப்பை உருவாக்க வெறும் 2015-16ஆம் நிதியாண்டில் வெறும் 15 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.
முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், 2015-16-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் உள்ள சில முக்கிய அம்சங்கள்

- பள்ளி கல்வித் துறைக்கு ரூ.20,936 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 107 தொடக்க பள்ளிகள் நடுத்தர பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
- ரூ.450 கோடி செலவில் பள்ளிகளில் கட்டமைப்பு.
- அரசு பள்ளிகள் அனைத்திலும் 100 சதவீதம் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
- சிறப்பு கல்வி உதவித்தொகைக்காக ரூ.361 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்புக் வழங்க ரூ.1037.62 கோடி நிதி. உயர்கல்வித்துறைக்காக ரூ.3696 கோடி நிதி.
- விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறைக்கு ரூ.149.70 கோடி நிதி ஒதுக்கீடு.
- 250 பழமையான கோயில்களை புதுப்பிக்க ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு.
- அன்னதான திட்டம் மேலும் 206 கோயில்களில் விரிவுபடுத்தப்படும்.
- சுற்றுலாத்துறைக்கு ரூ.183 கோடி நிதி.
- பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.140.12 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மக்கள் நலவாழ்வு திட்டத்திற்கு ரூ.8245 கோடியாக நிதி உயர்த்தப்பட்டுள்ளது.
- முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.781 கோடி ஒதுக்கீடு.
- மகளிர் சுகாதார திட்டத்திற்கு ரூ.60.58 கோடி நிதி ஒதுக்கீடு.
- ஏழை கர்ப்பிணி பெண்களின் நலவாழ்வு திட்டத்திற்காக ரூ.668.32 கோடி நிதி ஒதுக்கீடு.
- 12,609 அங்கன்வாடி மையங்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
- கிராமப்புற தூய்மை இந்தியா திட்டத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- தூய்மை கிராம இயக்கத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு.
- சென்னை மாநகர வளர்ச்சி திட்டத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு.
- மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.615.78 கோடி நிதி ஒதுக்கீடு.
- வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- லட்சம் பேருக்கு தொழில் திறன் பயிற்சி. தகவல் தொழில்நுட்பத்திற்கு ரூ.82.49 கோடி.
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு. கைத்தறி விற்பனையை அதிகரிக்க தள்ளுபடி மானிய திட்டம் தொடரும்.
- 2015 -16 நிதிநிலை அறிக்கையில் இந்த அறிவிப்புகளைத் தவிர மேலும் பல முக்கிய திட்டங்களையும் அறிவித்துள்ளார் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications