திருவொற்றியூரில் வீடு வீடாக "படகில்" சென்று நிவாரண பொருட்கள் கொடுத்த ஓ.பி.எஸ்
சென்னை: சென்னையில் வெள்ளம் மிக மோசமாக பாதித்த திருவொற்றியூர் பகுதியில் படகில் சென்று வீடு வீடாக நிவாரணப் பொருட்களை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வழங்கினார்.
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மருந்து, உணவுப் பொருட்கள் வழங்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசைக் காட்டிலும் தன்னார்வலர்கள் அதிகம் பேர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசு மீது கடுமையான விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு சார்பில் அமைச்சர்களும் வெள்ளம் மற்றும் நிவாரண பொருட்க

வடசென்னையின் திருவொற்றியூர் பகுதியில் பல அடி உயரத்துக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் இன்று நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் படகில் சென்று ஒவ்வொரு வீடாக வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

மாடி வீடுகளில் தஞ்சம் அடைந்தவர்கள் சேலைகளை தொங்கவிட்டு அதன் முனையில் நிவாரணப் பொருட்களை வைத்து மூட்டையாக மேலே தூக்கிக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications