For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓடும்.. கூவம் மணக்கும்... ராமதாஸ் "நச்"!

அதிமுக அணிகள் இணைப்பால் இனி தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓடும் என்று பாமக தலைவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டல் அடித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக அணிகள் இணைப்பால் இனி தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓடும் என்று பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டல் அடித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பின் பல களேபரங்கள் அதிமுகவில் நடந்தேறின. கட்சி ஓபிஎஸ் அணியாகவும் ஈபிஎஸ் அணியாகவும் பிரிந்தன.

OPS-EPS faction merger, Ramadoss comments on twitter

இந்த அணிகளும் இணைவதற்குள் தமிழக அரசியலில் பல்வேறு திடுக் திருப்பங்கள் நடந்தன. எப்படியோ நீண்ட இழுபறிக்குப் பின்னர் இன்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் இணைந்தன.

இந்த இணைப்புக் குறித்து பாமக தலைவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டல் அடித்துள்ளார். அவரின் பதிவுகள் இதோ..

அதிமுக அணிகள் இணைப்பு. இனி தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓடும். காவிரி கரைபுரளும், இறந்த உழவர்கள் உயிர் பிழைப்பார்கள். வாழ்க ஜனநாயகம்!

அதிமுக அணிகள் இணைந்ததால் நீட் தேர்வு ரத்தாகும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். கூவம் மணக்கும் என்று நம்பலாம்!

English summary
PMK leader Ramadoss commented about OPS and EPS faction merger on his twitter page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X