For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அணிகள் இணைப்பு: அதிமுக தலைமைக் கழகம் புறப்பட்டது ஓபிஎஸ் அணி

அதிமுக அணிகள் இணைப்பு நிகழ்வு இன்று நடைபெறவுள்ளதால், ஓபிஎஸ் மற்றும் அவரின் முக்கிய நிர்வாகிகளை நேரில் அழைக்க 3 மூத்த அமைச்சர்கள் ஒரே காரில் சென்று அழைத்துள்ளனர். அதன்பேரில் ஓபிஎஸ் அணியினர் அதிமுக தலைம

By Devarajan
Google Oneindia Tamil News

Recommended Video

    துணை முதல்வராகும் ஓபிஸ்?-வீடியோ

    சென்னை: அதிமுக அணிகள் இணைப்பு நிகழ்வு இன்று நடைபெறவுள்ளதால், ஓபிஎஸ் மற்றும் அவரின் முக்கிய நிர்வாகிகளை நேரில் அழைக்க 3 மூத்த அமைச்சர்கள் ஒரே காரில் சென்றுள்ளனர். அதன்பேரில் ஓபிஎஸ் அணியினர் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல புறப்பட்டனர்.

    இதனிடையே ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் ஜெயலலிதா நினைவிடத்துக்கு நேரில் ஒன்றாக வந்து, ஜெயலலிதா சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தி அணிகள் இணைப்பை அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.

    OPS and EPS teams merges, OPS team Going to ADMK Party headquarters

    அதிமுக தொண்டர்கள் இப்போது ஜெயலலிதா நினைவிடம் நோக்கி குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் மெரினா கடற்கரை பரபரப்பாகியுள்ளது.

    அதன்பிறகு தலைமைக்கழகம் சென்று அதிகாரப்பூர்வ அணிகள் இணைப்பை அறிவிப்பார்கள் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது அணியினருடன், சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த ஆலோசனையில் எஸ்.பி.வேலுமணி, துரைக்கண்ணு, கருப்பணன், சேவூர் ராமச்சந்திரன், சரோஜா, சி.வி.சண்முகம், ராஜலட்சுமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து ஓபிஎஸ் அணியினர் அதிமுக அலுவலகம் புறப்பட்டனர்.

    English summary
    OPS team Going to ADMK Party headquarters for teams merges function.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X