தினகரனுடன் ஓபிஎஸ் அணி எம்எல்ஏ மாணிக்கம் சந்திப்பு... அணி மாற முயற்சியா?
ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம், மதுரையில் உள்ள டிடிவி தினகரனை சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஜெயலலிதா இறந்தவுடன் அதிமுக 3 அணிகளாக பிளவுப்பட்டு மல்லுக்கட்டி வரும் ந
ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம், மதுரையில் உள்ள டிடிவி தினகரனை சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா இறந்தவுடன் அதிமுக 3 அணிகளாக பிளவுப்பட்டு மல்லுக்கட்டி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. டிடிவி தினகரனை கட்சியில் சேர்த்து கொள்ள முடியாது என்றும், அவரை துணை பொதுச் செயலாளராக சசிகலா நியமித்தது செல்லாது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி மேலூரில் பொதுக் கூட்டத்துக்கு தினகரன் அணியினர் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த கூட்டம் நேற்று நடைபெற்றது. டிடிவி தினகரன் இன்று காலை மதுரை மீனாட்சியம்மனை தரிசனம் செய்ய சென்றார்.
அப்போது அந்த கோயிலுக்கு வந்த சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் சந்தித்து பேசியதாக தெரிகிறது. மாணிக்கும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவராவார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பா அல்லது அணி மாறுவதற்கான அடித்தளமா என்பது போக போகத்தான் தெரியும்.
ஓபிஎஸ்ஸுக்கு முதல் முதலாக ஆதரவு தெரிவித்தவர் எம்எல்ஏ மாணிக்கம். அதேபோல் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டி சமீபத்தில் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி எடப்பாடி அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications