அலங்காநல்லூர் மக்கள் விரும்பும் போது ஜல்லிக்கட்டு.. தோல்வி முகத்துடன் ஓ.பி.எஸ் பேட்டி
அலங்காநல்லூர் மக்கள் விரும்பும் போது ஜல்லிக்கட்டை நடத்திக் கொள்ளட்டும் என்று முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.தடை நீக்கப்பட்டுவிட்டதால் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மதுரை: ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் நிரந்தரமாக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு இன்று நடந்துவிட்டதாகவும், அலங்காநல்லூரில் மட்டும் அப்பகுதி பெருமக்கள் விரும்பும் போது ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ளட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஒரு வாரமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், நேற்று தமிழக அரசு அவசரச் சட்டத்தை இயற்றியது. இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு கடுமையான எதிர்ப்பு தமிழக மக்களிடம் எழுந்துள்ளது. நிரந்தரச் சட்டம் ஒன்றே தீர்வு என்ற அடிப்படையில் சென்னை, அலங்காநல்லூர், திருச்சி, திண்டுக்கல், நாகை என பல மாவட்டங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்த பல்வேறு முயற்சிகளை எடுத்த ஓபிஎஸ், பெரும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளார். இந்நிலையில், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று டெல்லி வரை சென்று அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. இந்தச் சட்டத்தை நிரந்தரமாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மேலும், இந்த அவசரச் சட்டம் நிரந்தரமானது.
அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதையடுத்து, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்துள்ளது. ஆனால் அலங்காநல்லூரில் மட்டும் நடக்கவில்லை. இந்த ஊர் பெருமக்கள் எப்போது விரும்புகிறார்களோ அப்போது ஜல்லிக்கட்டு நடத்தட்டும் என்று கூறினார்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத ஏமாற்றத்தோடு மதுரையில் இருந்து சென்னை திரும்பியுள்ளார் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். மக்கள் போராட்டம் வென்றுள்ளதை இது காட்டுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications