பொதுக் குழுவுக்கு உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க அதிகாரம் இல்லை- ஹைகோர்ட்டில் ஓபிஎஸ் வாதம்
சென்னை: கட்சியின் கொள்கைகளை வகுக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக் குழுவுக்கு, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க அதிகாரம் வழங்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.
அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக, பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி. பிரபாகர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அமர்வில் இன்று துவங்கியது.
பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், 2022 ஜூலை 11 பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானமாக கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஏதும் அளிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டினார்.

பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில், கட்சியில் இருந்து நீக்கும் போது கட்சியின் சட்ட விதிகளை பின்பற்றவில்லை என்பதை தனி நீதிபதி ஒப்புக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். கட்சியின் கொள்கைகளை வகுக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவுக்கு, உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க அதிகாரம் வழங்கப்படவில்லை எனவும், உரிய நடைமுறையை பின்பற்றாமல் நடவடிக்கை எடுத்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததற்காக உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக எப்படி கூற முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
திமுகவுடன் இணக்கமாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், தமிழகத்தில் இந்த இரு கட்சி தலைவர்களும் சந்தித்துக் கொள்ளும் போது பேசிக்கொள்வது என்பதே கிடையாது என விளக்கமளித்தார். பொதுக் குழு கூட்டம் நடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடந்த சம்பவம் என்பது திடீரென ஏற்பட்டது எனவும், சம்பவம் நடந்த போது அங்கிருந்தவர்கள் எம்.எல்.ஏ.க்கள், இ பி எஸ் தரப்பினர் தான் எனவும் குறிப்பிட்டார்.
பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போட்டியிட தகுதியுள்ள தன்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டு தேர்தலை நடத்தியுள்ளதாகவும், கட்சியில் பன்னீர்செல்வம் நீடிப்பது கட்சியுன் நலனுக்கு விரோதமானது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் எப்படி கூற முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். போட்டியிட விரும்பிய தேர்தலில் தன்னை ஒதுக்கி வைத்து விட்டு, இபிஎஸ் வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்டதாக பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.
கட்சியில் இருந்து நீக்கியதால் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியாமல் ஈடுசெய்ய முடியாத இழப்பை எதிர் கொண்டுள்ளார் பன்னீர்செல்வம் என்றும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து பன்னீர்செல்வம் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து, பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வருவது, எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக வாதங்களை முன் வைத்தார்.
தனி நீதிபதி, கட்சியின் நிறுவனரின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பளித்துள்ளார் எனவும், பொதுக்குழுவில் பெரும்பான்மை இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்படுகிறது. ஆனால் அதன் அடிப்படையில் முடிவெடுக்க முடியாது என்பதே கட்சி நிறுவனரின் நோக்கம் எனவும் வாதிட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து, பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்து, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்து, பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட நிபந்தனைகள் விதித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தன்னிச்சையானவை, சட்டவிரோதமானவை எனவும் வாதிட்டார்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா என்பது குறித்து நீதிமன்றம் இதுவரை முடிவெடுக்கவில்லை எனவும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாக கூறுவதன் மூலம், அடிப்படை உறுப்பினர்களின் தீர்ப்பை மீறுகின்றனர் எனக் குறிப்பிட்டார்.
2021 டிசம்பரில் இருந்து இரட்டை தலைமை அமலில் இருந்த நிலையில் ஜூன் 23ம் தேதி திடீரென ஒற்றை தலைமை குறித்து பேசப்பட்டது எனவும், ஒற்றை தலைமை குறித்து கட்சியினர் மத்தியில் எந்த கருத்துக் கணிப்பும் நடத்தப்படவில்லை எனவும் வாதிட்டார். உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என கூறிய தீர்ப்பின் அடிப்படையிலும், பொதுக்குழு பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவின் அடிப்படையிலும் தீர்மானங்கள் செல்லும் என தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளது தவறு எனவும் குறிப்பிட்டார். பன்னீர்செல்வம் தரப்பு வாதங்கள் நாளை தொடர்கிறது.
-
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா? -
ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம் -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு!












Click it and Unblock the Notifications