ராமேஸ்வரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.. பிரிட்ஜோ குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல்
இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுதல் தெரிவித்தார்.
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து தங்கச்சிமடத்தில் நடைபெறும் போராட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அப்போது சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற 22 வயது மீனவர் அண்மையில் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனைக் கண்டித்தும் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைத் தடுக்கக்கோரியும் பிரிட்ஜேரிவின் உடலை வாங்க மறுத்தும் அப்பகுதி மீனவர்கள் 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரிட்ஜோவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதேபோல் காயமடைந்த மீனவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து அவர் நலம் விசாரித்தார்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் சந்தித்து ஒ.பன்னீர்செல்வம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வாய்ப்பு கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications