அந்த அன்பு ஆடுகள் 'மே' என்று கத்தியதா அல்லது 'அம்மே' என்று கத்தியதா...!
பெரியகுளம்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடித் தீர்த்த நிலையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், உருக்கமாக, 104 ஜோடிகளுக்குக் கல்யாணம் செய்து வைத்து கண்ணீர் மல்க அவர்களை ஆசிர்வதித்து, அம்மா விரைவில் வழக்கிலிருந்து விடுதலையாக வேண்டும், மீண்டும் முதல்வராக வேண்டும் என்று மனதார வேண்டி விரும்பி இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார்.
122 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வையுங்கள். அம்மாவைப் பிடித்த தோஷம் விலகும் என்று (வழக்கம் போல) யாரோ ஒரு ஜோசியர் சொல்லியுள்ளார். இதைக் கேட்ட ஓ.பன்னீர் செல்வம். தேடிப் பிடியுங்கள் 122 ஜோடியை, நானே வந்து நம்ம ஊரில் நடத்தி வைக்கிறேன் என்று தேனி மாவட்ட அதிமுகவினருக்கு உத்தரவு போட, ஓ.பி.எஸ் வட்டாரத்தில் மணமக்களைத் தேடும் பணி தொடங்கியது.

அங்குமிங்கும் அலைந்தும் கூட 104 ஜோடியைத்தான் தேற்ற முடிந்ததாம். அதில் சில ஜோடிகள் முற்றலாக இருந்தது கண்களை உறுத்தினாலும் கூட அவர்களையும் கூட திருமண லிஸ்ட்டில் சேர்த்து விட்டனர். சில ஜோடிகள், அதிமுக இளம் பெண்கள் மற்றும் இளைஞர் பாசறைகளைச் சேர்ந்தவர்களாம்.
இப்படியாக திரட்டப்பட்ட 104 ஜோடிகளுக்கும் பெரியகுளத்தில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் விமரிசையாக திருமணம் நடந்தேறியது. திருமணத்திற்காக முதல் நாளே வந்து விட்ட பன்னீர் செல்வம் திருமண ஏற்பாடுகளை தானே நேரடியாக வந்து பார்வையிட்டு ஒரு குறையும் இல்லாதவாறு மேற்பார்வையிட்டு விட்டுச் சென்றார்.
அம்மாவின் பிறந்த நாளன்று இந்தத் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. 104 ஜோடிகளுக்கும் குத்துவிளக்கு, குக்கர், பால் குக்கர், சட்டி பானை, குட்டி பீரோ, மின்விசிறி என்று 67 சீர்வரிசைப் பொருட்கள் கொடுக்கப்பட்டன. திருமணம் முடிந்ததும் மணமக்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்டார் முதல்ர்.
சரி, அடுத்து ஆடு மேட்டருக்கு வருவோம்...
இது திண்டுக்கல்லில் நடந்த கதை. அதாவது அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுன் தன் பங்குக்கு 67 ஜோடிகளுக்கு் திருமணம் செய்து வைத்து அசத்தினார். இவரும் ஏகப்பட்ட சீர்வரிசைகளை மணமக்களுக்குக் கொடுத்தார். அதில் முக்கியமானது ஆளுக்கு ஒரு ஜோடி ஆட்டுக் குட்டி. எப்படி ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சர்களும் எந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டாலும் அம்மா போட்டோவை முன்னாடி வைத்துக் கொள்கிறார்களோ, அதேபோல இந்த ஆட்டுக் குட்டிகளுக்கும் கழுத்தில் ஜெயலலிதா படத்தை கட்டித் தொங்க விட்டிருந்தனர். பார்ப்பதற்கே படு ஜோராக இருந்தது.. அந்த ஆட்டுக் குட்டிகள் மே என்று கத்தியதா.. அல்லது அம்மே என்று கத்தியதா என்பதுதான் குழப்பமாக இருக்கிறது!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications