சென்னை கலவரம்… கைது செய்யப்பட்ட 36 மாணவர்கள் விடுவிப்பு.. சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

சென்னையில் கடந்த 23ம் தேதி நடைபெற்ற வன்முறையில் கைது செய்யப்பட்ட 36 பேர் உடனடியாக விடுதலைச் செய்யப்படுகிறார்கள் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவர்களின் எதிர்காலம் கருதி சென்னை வன்முறையில் கைது செய்யப்பட்ட 36 பேர் உடனடியாக விடுதலைச் செய்யப்படுகிறார்கள் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் சென்னை மெரினா கடற்கரையில் ஒரு வாரமாக நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை கலைக்க தமிழக போலீசார் முயன்ற போது அது வன்முறையாக மாறியது. போலீசாரே குடிசை மற்றும் ஆட்டோக்களுக்கு தீ வைத்தது பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த வன்முறை குறித்து நீதி விசாரணை வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் குரல் எழுப்பின.

OPS releases 36 student under rule 110

இந்நிலையில், இன்று கூடிய சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கைதான 36 மாணவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படுகிறது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் சென்னையைச் சேர்ந்த 21 பேரும், மற்ற மாவட்டங்களில் கைது செய்யப்பட்ட 15 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+