"அம்மா" போட்டோவை வணங்கி விட்டு பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டைப் பையிலிருந்து எடுத்து அதை வணங்கி விட்டு அதன் பின்னரே முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் ஓ.பன்னீர் செல்வம்.
நேற்று ஆளுநர் மாளிகையில், ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. இந்த பதவியேற்பு விழாவில் பல உருக்கமான காட்சிகளைக் காண முடிந்தது.
கிட்டத்தட்ட அனைத்து அமைச்சர்களும அழுபடியும், தேம்பியும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். கவர்னர் ரோசய்யா மட்டும்தான் அழவில்லை.

இதில் முதலில் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றுக் கொண்டார். இதற்காக அவரை தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் அழைத்தபோது எழுந்து வந்த ஓ.பன்னீர் செல்வம், தனது சட்டைப் பையில் இருந்த ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியில் எடுத்து அதை வணங்கினார். சாமி கும்பிடுவது போல பவ்யமாக வணங்கினார் பன்னீர் செல்வம்.
அதன் பிறகு கலங்கிய கண்களுடன், நா தழுதழுத்தபடி அவர் சத்தியப் பிரமாணத்தை வாசித்தார். அவரால் சரிவர வாசிக்கவும் முடியவில்லை. இதனால் நிறுத்தி நிறுத்தி வாசித்து முடித்தார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications