மகாத்மாவின் மறு உருவம் எடப்பாடி.. இந்த வழக்கை விடுங்க.. எல்லாம் தள்ளுபடி.. ஓபிஎஸ் ஆதரவாளர் சீண்டல்!
சென்னை : "மகாத்மாவின் மறு வடிவமான எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட மற்றும் போடப் போகும் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி" என ஈபிஎஸ்ஸுக்கு சாதகமான தீர்ப்புகள் குறித்து விமர்சித்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்.
அதிமுக விவகாரத்தில் அனைத்து வழக்குகளிலும் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனை கேள்விக்குட்படுத்தி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் ஓபிஎஸ் ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ்.

ஓபிஎஸ் அணி
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாகவும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்குகளை தனி நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்து வந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

ஒரே ஒரு பிடி
இந்நிலையில், தனி நீதிபதி அளித்துள்ள தீர்ப்பில் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான சில வாய்ப்புகள் உள்ளதாக ஓபிஎஸ் அணியினர் கூறுகின்றனர். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானத்தைப் பொறுத்தவர பிரதான வழக்கு தான் தீர்மானிக்க முடியும், இது தான் இறுதி தீர்ப்பு என சொல்ல முடியாது. ஒற்றை நீதிபதி சொன்ன தீர்ப்பு இறுதியாகாது. நிச்சயம் மேல் முறையீடுட்டில் நல்ல தீர்ப்பு வரும் என்கின்றனர் ஓபிஎஸ் தரப்பினர். கடந்த 9 மாத காலமாக சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து வரும் ஓபிஎஸ் தனக்கு சாதகமாக ஒரு பிடியாவது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்.

மகாத்மா எடப்பாடி
இந்நிலையில், ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதைச் சுட்டிக்காட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,
"கொடநாட்டுல கொலை கொள்ளையே நடக்கல
நாலாயிரத்து ஐநூறு கோடிக்கு டெண்டர்ன்னு ஒன்னே நடத்தல..
எடப்பாடி கட்சியை அபகரிக்கல..
நிலக்கரி காணமல் போகல..
ஊழல்னு ஒன்னு தமிழக எல்லைக்குள்ளேயே இருக்கல..
குட்காவே விற்கல..
எடப்பாடி ஆட்கள் வருமானத்துக்கு அதிகமா சொத்து ஏதும் சேர்க்கல..
மகாத்மாவின் மறு வடிவமான எடப்பாடி மீது போடப்பட்ட மற்றும் போடப் போகும் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி..
குறிப்பு- "பசிக்கு வடை திருடியவருக்கு பத்து மாதம் சிறை" எனத் தெரிவித்துள்ளார்.

தேர்டு அம்பயர்
மேலும் மற்றொரு பதிவில், "முதல் நடுவர் இரண்டாம் நடுவர் ஆகியோரது தவறான தீர்ப்புகளை Third அம்பயர் எனப்படும் மூன்றாம் நடுவர் ஆதாரப்படுத்தி மாற்றி அறிவிப்பது கிரிக்கெட்டில் மட்டுமல்ல.. அரசியலிலும் உண்டு. ஒருவேளை அந்த மூன்றாம் நடுவர் வேலையை தேர்தல் ஆணையமும் சரியாக செய்யவில்லை என்றால்.. அந்த பொறுப்பை மக்கள் மன்றம் ஏற்றுக் கொள்ளும். அப்படி மக்கள் மன்றத்தால் எழுதப்படும் தீர்ப்பு என்பது கடுகளவும் பிசகாத தர்மத்தை நிலைநாட்டும்." என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications