ஜல்லிக்கட்டு: மோடிக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீண்டும் நடப்பதற்கு உதவியதற்காக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‛தமிழக அரசின் சட்டத்தால் ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்துவதற்கு பிரதமர் மோடி ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருந்ததாகவும், இதனால், தமிழர்களின் பாரம்பரியம் மீட்கப்பட்டுள்ளது என்றும் இந்த சட்டம் கொண்டு வருவதற்கு உறுதுணையாக இருந்து உதவி புரிந்ததற்காக தமிழக அரசு மற்றும் மக்களின் சார்பில் நன்றி' என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்த குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications