ஜெயலலிதா இல்லாத போயஸ் கார்டனுக்குப் போய் விட்டு தலைமைச் செயலகம் வந்த ஓ.பன்னீர் செல்வம்!
சென்னை: இந்தக் காட்சி நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கிறது. அதாவது ஜெயலலிதா பெங்களூர் சிறைச்சாலையில் இருக்கிறார். ஆனால் முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம், நேற்று தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும், இன்று முதல்வராகப் பதவியேற்ற பின்னரும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்குப் போய் விட்டு பின்னர்தான் அடுத்த வேலையைப் பார்த்துள்ளார்.
நேற்று மாலையில் கூடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களின் அடுத்த தலைவராக ஓ.பன்னீர் செல்வத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

இதையடுத்து நேராக போயஸ் கார்டன் வீட்டுக்குக் கிளம்பிச் சென்றார் ஓ. பன்னீர் செல்வம். அங்கு வீட்டுக்குள் போய் விட்டு திரும்பி வந்தார். அதன் பின்னர்தான் அவர் தனது சகாக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு விரைந்தார்.
அதேபோல இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவுக்கு வந்த அவர் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். பின்னர் நேராக மீண்டும் போயஸ் கார்டன் வீட்டுக்குப் போனார். அங்கு போய் விட்டு அதன் பிறகே தலைமைச் செயலகம் புறப்பட்டுச் சென்றார்.
சென்டிமென்ட்டாக ஜெயலலிதாவின் வீட்டுக்கு பன்னீர் செல்வம் போயிருக்கலாம் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications