பாஜக அரசின் 3 ஆண்டு நிறைவு.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ஓ.பி.எஸ்!
3 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: மத்திய அரசின் 3 ஆண்டுகள் நிறைவை அடுத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 2014, மே 26 அன்று நாட்டின் ஆட்சித் தலைமைக்கு பொறுப்பேற்று கொண்டது.

தற்போது பாஜக ஆட்சியமைத்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ளன. நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது பாஜக. மோடியின் 3 ஆண்டு ஆட்சியில் சாமனிய மக்களின் வாழக்கை தரம் உயரவில்லை என்று காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஒட்டு மொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கான சாதனை திட்டங்களை நிறைவேற்றி 3 ஆண்டுகளை வெற்றிக்கரமாக நிறைவு செய்துள்ளது.
பாரத திருநாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் நரேந்திரமோடிக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications