இலங்கை சிறையில் 30 மீனவர்கள்.. 119 படகுகள்.. விடுவிக்க நடவடிக்கை கோரி மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்
இலங்கை சிறையில் உள்ள 30 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோடிக்கு முதல்வர் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். மேலும் 119 படகுகளையும் விடுவிக்க அவர் கோரியுள்ளார்.
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த 5 மீனவர்கள், நெடுந்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் எடுத்துச் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே சிறையில் 25 பேர் உள்ள நிலையில் இந்த 5 பேரை சேர்த்து 30 பேர் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும், இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ள 119 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் கோரியுள்ளார்.
தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதுபோன்று எதிர்க்காலத்தில் நடைபெறாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து மீனவ மக்கள் கோரி வந்தாலும், அதற்கு இன்னும் நிரந்தர தீர்வு எட்டப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications