கோயம்புத்தூர் மைசூர்பாகு வேணுமா.. அட ஆன்லைன்லே கிடைக்குதுங்க!!
நாவில் பட்டவுடன், படார் என்று கரைந்து நம் உடல் உறுப்புகளை எல்லாம் குளுரடைய செய்து, நம் வயிற்றில் சென்று அடையும் பல இனிப்பு வகைகளில் ஒன்று தான், மைசூர்பாகு. இந்த பிரபஞ்சத்தில் பல வகையான மைசூர்பாகு உண்டு, அதில் கோயம்புத்தூர் மைசூர்பாகு மட்டும் ஒரு தனித்துவமான ஒரு இனிப்பு பண்டம.
அப்படி என்ன தானுங்க இருக்கு இந்த கோயம்புத்தூர் மைசூர்பாகுலே?
மைசூர்பாகு என்றாலே கடிப்பதற்கு சற்று கடினமான இனிப்பு என்ற பெயர் சமீப காலத்தில்தான் மறைந்து போயிற்று. பல் வலிக்க கடித்து சாப்பிடும் பொருட்களை எல்லாம் மக்கள் இப்போது அதிகம் விரும்புவதில்லை. வாயில் இட்டால் கடிக்காமலே கரைந்து போகவேண்டும். அப்படிப்பட்ட இந்த மைசூர்பாகு வகைகளில் , கோயம்புத்தூர் மைசூர்பாகு ஒரு விதமான பக்குவத்திலும் மற்றும் பதத்திலும் செய்வதினால் தான், இன்றும் இந்த கோயம்புத்தூர் மைசூர்பாகு, எல்லா இனிப்புகளில் மத்தியில் முடி சூட மன்னனாக விளங்குகிறது. பதம், நேரம், பொருட்களின் தரம் மற்றும் சரியான விகித கலவைதான் கோயம்புத்தூர் பாவில் முக்கியம்.

கோயம்புத்தூர் மைசூர்பாகு செய்முறை:
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 600 கிராம்
தெளிவு நெய் - ஒன்றே முக்கால் லிட்டர்
சீனி - ஒன்றே முக்கால் கிலோ
தண்ணீர் - அரை லிட்டர்
இந்த கோயம்புத்தூர் மைசூர் பாவில் ஒரு தனித்துவம் என்னவென்றால், இதில் நெய் எனப்படுவது ஒரு பிரதான மூல பொருளாக விளங்குகிறது. சாதாரண மைசூர்பாகு செய்வதற்கு நெய் மட்டும் போதும், ஆனால் இந்த கோயம்புத்தூர் மைசூர்பாகு செய்வதற்கு தெளிவான நெய் தேவை. எல்லா மலிவு விலை கடைகளில் கிடைக்கும். இந்த தரமான நெய், எண்ணெய் போன்று இருக்கும். முதலில் ஒரு பெரிய வாணலியில் சீனியைப் போட்டு, தண்ணீர் ஊற்றி பாகுவை காய்ச்சவும். அந்த சீனி கரைவதற்கு ஏற்ப தண்ணீர் இருந்தால் போதுமானது. சீனிக் கரைசல் அடுப்பில் இருக்கும் போதே, தரமான கடலை மாவினை சலித்து, கட்டிகள் இல்லாமல் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பாகு ஒரு கொதி வந்தவுடனே கடலை மாவை பாகில் கொட்டவும். சீனி முழுவதும் கரைந்து இருக்க வேண்டும். அடுத்த ஒரு முக்கியமான கட்டம் தான் கிளறி விடுவது, நன்றாக கிளறவேண்டும்.
எப்படி கிளற வென்றும் என்றால், முதலில் சீனிக் கரைசலுடன் கடலை மாவு சேரும்படி நன்றாக கிளறிக் கொள்ளவும். பிறகு எடுத்து வைத்துள்ள நெய்யில் மூன்றில் ஒரு பங்கு ஊற்றி நன்கு கிளறவும். கைகளுக்கு ஓய்வில்லாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கோயம்புத்தூர் மைசூர் பாவின் தனித்துவமான பதம் இருந்துதான் ஆரம்பம் ஆகா உள்ளது. ஓரங்களை எல்லாம் வழித்து விட்டவாறு கிளறவும். வாணலியின் எந்த இடத்திலும் மாவு ஒட்டிக் கொண்டு இருக்கக் கூடாது. ஐந்து நிமிடம் கிளறியதும் மீதம் உள்ள நெய்யில் பாதியை ஊற்றிக் கிளறவும். தொடர்ந்து விடாது கிளறவும். மிகவும் மஞ்சள் நிறமாக இருந்த மாவு, சற்று நிறம் மாறி வரும். ஓரம் ஓட்டுவது போல் இருந்தால், ஓரங்களில் சிறிது நெய் ஊற்றி தொடர்ந்து கிளறவும்.மாவு சற்று கெட்டியாக தொடங்கியவுடன் மீதமுள்ள நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்கு கிளறவும். அதன் பிறகு அடுப்பில் இருந்து இறக்கவும்.
சுமார் 15 ல் இருந்து 20 நிமிடங்கள் கிளறிய பிறகுதான் இந்த பக்குவம் வரும். அடுப்பில் இருந்து இறக்கிய பிறகு மாவினை வழித்து ஒன்று சேர்க்கவும். மேலே சிறிது நெய் விடவும். ஒரு ட்ரேயில் உள்புறம் முழுவதும் நெய் தடவி, அதில் தயாரித்து வைத்துள்ள மைசூர்பாகு மாவினை கொட்டி, அழுத்தாமல், பரப்பி விடவும். ஓரங்களில் நெய் ஊற்றி, ஓரத்தினை மட்டும் லேசாக அழுத்திவிடவும். இதனை அப்படியே ஒரு நாள் வைத்திருக்கவும். அப்போதுதான் மாவு சற்று கெட்டியாகி, நாம் விரும்பும் பதம் கிடைக்கும். மறுநாள் எடுத்து அதனை துண்டங்கள் போடவும். நீங்கள் விரும்பிய கோயம்புத்தூர் மைசூர்பாகு இப்போது தயார் நிலையில் உள்ளது.
இதை பரிமாறி உங்கள் அன்பை வெளிப்படுத்தி கொள்ளுங்கள். இவ்வளவு தூரம் செய்வதற்கு, பெண்களுக்கு நேரம் பத்தாது, அதுவும் இல்லாமல் இந்த செய்முறையில் ஒரு சிறு கோளறு ஏற்பட்டால் கூட, கோயம்புத்தூர் மைசூர்பாகுவின் பதம் மற்றும் ருசி காணாமல் போய்விடும். இதை சுலபாகாம வாங்குவதற்காக பல ஸ்வீட் கடைகளுக்கு சென்று நம் பணத்தை கரி ஆக்குகிறோம். அப்படி வாங்கினாலும் அந்த ருசி கண்டிப்பாக வராது. ஆனால் அதே சுவை மற்றும் அதே மனம் மாறாத பதத்துடன் தரவது நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) ஆன்லைனில். இங்கு தயாரிக்கப்படும் மைசூர்பாகு சுத்தமான நெய்யிலும் மற்றும் கடலை மாவிலும் தயாரிக்கபடுகிறது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான தின்பண்டம் உண்டு,
இப்போது இருக்கும் இந்த அவசர உலகில் நாம் அதை ஊர் ஊராக சென்று சுவைக்க முடியாது. பலருக்கு அது ஒரு கனவாகவே இருக்கிறது. நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) இந்த கனவை நினைவாக்குகிறது. எலேய் ஒரு தடவ வாங்கி பாரு லே நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com) , அப்பறம் வாங்கி கிட்டே இருப்பீங்க. எலேய் மிஸ் பண்ணிடாதீங்க அப்பறம் வருத்த்படுவீங்க.












Click it and Unblock the Notifications