சுவையான கோவில்பட்டி கடலை மிட்டாய் இப்போது ஆன்லைனில்!!
கோவில்பட்டி என்ற உடன் தமிழகத்தில் பெரும்லானோருக்கு சட்டென்று நினைவில் வருவது கோவில்பட்டி வீரலட்சுமி மற்றும் கோவில்பட்டி கடலை மிட்டாய். கடலை மிட்டாய் என்பது தமிழகத்தில் பரவலாக அணைத்து மாவட்டங்களிலும்கிடைக்கக்கூடியது என்றாலும் கோவில்பட்டி கடலை மிட்டாய் என்றால் அதன் சுவை இன்னும் அதிகம் என்பது நாம் அறிந்ததே.
அன்றிலிருந்து இன்று வரை எந்த பெட்டி கடைக்கு சென்றாலும், நம் நாவு அங்கே கண்ணாடி பேழையில் அடைத்து விற்கப்படும் கடலை மிட்டாயை சுவைக்க நம்மை தூண்டும். கடலை மிட்டாய் உண்பது வெறும் சுவைக்காக மட்டும் அல்ல, அந்த உண்டால் நம் உடலுக்கு பலம், ஆரோக்யம் மற்றும் புத்துணர்ச்சி பிறக்கும். இந்த உலகத்தில் பல வகையான கடலை மிட்டாய்களை நீங்கள் சுவைத்திருக்கலாம், அனால் உன்னதமான தரமும், சுவையும் இருப்பது இந்த கோவில்பட்டி கடலை மிட்டாயில் மட்டும் தான்.

கோவில்பட்டி கடலைமிட்டாய்:
தரமான கடலைகளை தேர்ந்தெடுத்து சுத்தமான முறையில் இந்த கோவில்பட்டி கடலைமிட்டாய் தயார் செய்கிறார்கள். இத்தகைய அறிய வகை கோவில்பட்டி கடலை மிட்டாயை அதிக அளவில் உண்பதால் நல்ல உடல் கட்டு வருவதோடு அதிக எடை உள்ளவர்களின் எடை குறையும். இந்த கோவில்பட்டியில் அமைந்துள்ள மார்க்கெட் ரோடு முழுவதும் கடலை மிட்டாய் விற்கும் கடைகள் நாம் அதிக அளவில் காணலாம். அதில் குறிப்பாக MNR மற்றும் VVR என்கிற இரண்டு கடைகளில் தயாரிக்கப்படும் கடலை மிட்டாயில் தான் சுவை மிக அதிகமாக இருக்கும்.
இதன் சுவையின் ரகசியம் இந்த கோவில்பட்டி ஊரு மண் வாசனையும், கோவில்பட்டியில் பல வருட அனுபவத்துடன் கடலைமிட்டாய் தயாரிக்கும் உற்பத்தியாளர்களின் கை பக்குவம் தான் கடலை மிட்டாயின் அதிக சுவைக்கு காரணம் என்றே பலர் நம்புகின்றனர். இது மட்டுமில்லாமல் இங்கு விளையும் கடலையும் மிக தரமானகவும் இருப்பதால் இந்த கடலை மிட்டாய் இயற்கையாகவே மிக அதிக ருசி பெறுகிறது.
கடலை மிட்டாய் செய்யும் முறை:
தேவையான பொருட்கள்:
வறுத்த நிலக்கடலை - 100 கிராம்
வெல்லம் - அரை கிலோ
செய்யும் முறை:
வெல்லம் தான் கடலை மிட்டைக்கு ஒரு முக்கியமான உணவு பொருள். முதலில் வெள்ளத்தை அடுப்பில் வைத்து, குறிப்பிட்ட வெப்பத்தில் அதை மிகை இல்லாமல் சூடு படுத்தவும். அந்த வெப்பத்தில் பாகு வரும் வரை காய்ச்சி பின்பு சிறிது நேரம் பாகுவை ஆற வைக்க வேண்டும். பின்பு, குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு காய்ச்சிய வெல்லம் மீண்டும் இரண்டாவது முறையாக காய்ச்சவேண்டும். இந்த முறை பாகு நன்கு கொதிக்க விடவேண்டும்.
பாகு முறுகியதும் வறுத்த கடலை பருப்பை போட்டுக் கிளறவும். பின்னர் அதனை சட்டியில் இருந்து வெளியே எடுத்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மர அச்சில் கொட்டி பின்பு கனமான இரும்பு உருளை கொண்டு கடலைமிட்டாய் கலவையை சமப்படுத்துகின்றனர். நாம் வீட்டில் செய்தால் கடலை உருண்டை போல் உருண்டைகளாக பிடித்து கொள்ளலாம்.
பின்னர், கற்கண்டு மற்றும் ஏலக்காய் ஆகியவை தூளாக்கப்பட்டு, வெட்டப்பட்ட கடலைமிட்டாய் மீது தூவப்படுகிறது. இறுதியில் கடலை மிட்டாய் மீது தேங்காய் துருவலும் தூவப்படுகிறது. இவ்வாறாக தயாரிக்கப்பட்ட கடலை மிட்டாய் கால் கிலோ, அரைகிலோ, ஒரு கிலோ என எடையிடப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்படுகிறது. மேலும், உதிரி கடலைமிட்டாய் எனவும் பல்வேறு வடிவங்களிலும் கடலைமிட்டாய் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications