எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் கால்சியம் சத்து நிறைந்த பால்கோவா!
பால்கோவா என்றதுமே பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சாப்பிட துள்ளிக்கொண்டு வருவர். அத்தகைய பால்கோவாவில் எத்தனை வகைகள் உள்ளன. எத்தனை வகையான ருசிகள் அதில் ஒளிந்துள்ளது..? என ஆராய்ந்தால் சொல்லிக்கொண்டே போகலாம். நான் பால்கோவா சாப்பிட போறேன்னு சொன்னா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவானு..? கேட்கின்றவர்களுக்காகவே ஸ்பெஷலா ஸ்ரீவில்லிபுத்தூர் அல்வாவ உங்க கைக்கு கொண்டு வந்து சேர்க்க இருக்கவே இருக்கு ஸ்வீட்கானா.காம்.
இந்த பால்கோவாவுக்கு மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல்..? ஸ்ரீவில்லிபுத்தூர்தாங்க கரணம். இங்கு செய்யப்படும் அந்த பால்கோவானு சொன்னாலே போதும். மவுசு தன்னால வந்துரும். ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழகத்தின் பழமை வாய்ந்த ஊராகும். மேலும் இந்த ஊரில் இருக்கும் 1000 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட ஆண்டாள் கோவிலின் கோபுரமே நமது தமிழக அரசின் சின்னமாக விளங்குகின்றது.

இந்த ஸ்ரீவில்லிபுத்தூரின் முக்கிய தொழிலே பால்கோவா தயாரிப்பு தான். மற்ற பால்கோவாவிற்கும் இந்த பால்கோவாவிற்கும் ஏதேனும் சிறப்பு வித்தியாசம் இருக்குமேயானால், அது இதன் சுவையே ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைத்துள்ளது. இங்குள்ள பசுக்கள் தரும் பாலின் சுவையும், பாரம்பரிய கலைஞர்களின் கைவண்ணமும் இணைகையில் இந்த பால்கோவாவிற்கு தன்னாலே சுவை வந்து இணைந்து கொள்கிறது. இவ்வூரின் பால்கோவா மட்டுமில்லை, அதற்கு பயன்படும் பால் கூட அவ்வளவு சுவையாக இருக்கும்.
தமிழகத்தின் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா இங்கு மட்டுமில்லை, இந்தியாவின் பல்வேறு மூலைகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு இச்சுவை உலகளவில் இதெற்கென தனி பெயரினையும், சிறப்பினையும் பெற்றுள்ளது. இப்பொழுது இந்த பால்கோவாவின் செய்முறையை பார்ப்போம்.
தேவையான பொருட்கள் மிகவும் குறைவு தான். ஐந்து லிட்டர் பாலும், முக்கால் கிலோ சர்க்கரையும் தான்.
1. முதலில் ஐந்து லிட்டர் பாலினை ஒரு பெரிய வட்டகத்தில் ஊற்றி நங்கு காயவிட விடும்.
2. ஊற்றிய பால் பாதியாக குறையும் போது சர்க்கரை சேர்க்க வேண்டும்.
3. பாலில் சர்க்கரை சேர்த்தப்பின்பு அடிசேராமல் நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
4. பால் ஒரு வித கெட்டி பதத்திற்கு வந்தபின்பு அடுப்பிலிருந்து வட்டகத்தை இறக்கி வைத்து விட்டு வேறொரு பாத்திரம் அல்லது கிண்ணத்தில் ஊற்ற வேண்டும்.
5. பின்பு அதனை குளிர்படுத்த வேண்டும்.
அவ்வளவுதான். இப்போது சுவைமிக்க இனிப்பான பால்கோவா தயார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்யப்படும் பால்கோவாவிற்கு இணையாக வேறு எங்கும் அதே சுவையில் கிடைப்பது அரிது. இதன் வரலாறு தெரியுமா..? முன்னொரு காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவைக்கு அதிகமாகவே மாடுகள் இருந்தன. அவற்றிலிருந்து கிடைக்கும் பால் மீதம் பிடிக்க, என்ன செய்வதென்று அறியாது, அவ்வூர் மக்கள் அதில் ஒரு இனிப்பு வகை செய்தால் என்ன என்று எண்ணி, தயாரிக்கப்பட்டது தான் இந்த பால்கோவா, இதனை மற்ற அருகிலிருக்கும் ஊரில் இருப்பவர்களுக்கும் அளித்து வந்தனர். அவ்வூரிலே முதன்முதலாக பால்கோவா செய்யப்பட்டாதால் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்று சிறப்பாக பெயர் பெற்று நாட்டின் பல்வேறு மூலைகளில் பிரபலமானது.
நாட்டின் பல்வேறு மூலைகளில் தமிழர்கள் பரவியுள்ளனர். அனைவருக்கும் தம்முடைய சொந்த மண்ணில் செய்யப்படும் இனிப்புகளை உண்ண ஆர்வம் மிகுதியாக இருக்கும். அவர்கள் நினைத்தவுடன் தாம் நினைத்த தம் சொந்த மண்ணின் ருசியை ருசிக்க முடியாமல் இருப்பர். அவர்களுக்காகவே உள்ளது ஸ்வீட்கானா.காம்.
இந்த ஸ்வீட்கானா.காம் உங்கள் சொந்த மண்ணின் ருசியை உங்களிடமே கொண்டு வந்து சேர்க்கும். இங்கு நீங்கள் விரும்பிய இனிப்புகளை நீங்கள் இருந்த இடத்திலிருந்தே ஆர்டர் செய்யலாம். நீங்க எந்த மூலையில் இருந்தாலும் சரி நீங்கள் ஆர்டர் செய்த இனிப்பு வகைகள் அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும்.
இந்த ஸ்வீட்கானா.காம் -ல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மட்டும் இல்லங்க, தமிழ் நாட்டின் அனைத்து பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகள் அனைத்தையும் உங்கள் கைக்கு கொண்டு வந்து சேர்க்கும்.
இணையத்தளம் புதியதோ? இங்கு நம்பி வாங்கலாமா? பொருளின் தரம் எவ்வாறு இருக்கும்? என்ற பல சந்தேகங்கள் உங்களை சுற்றுகின்றதா..? கவலைவேண்டாம். இந்த இணையதளம் ஆரம்பித்து வருடம் ஆகிவிட்டது. மேலும் இங்கு நீங்கள் வாங்கும் பொருள் நல்ல தரமானதாகவும், சுவையானதாகவும் இருக்கும். இதற்ககான தரசான்றிதழும் உடன் வழங்கப்படுகின்றது.
படிக்கும் போதே உங்கள் நாவில் எச்சில் ஊறுகின்றதா..? அப்போ இன்னும் எதற்காக யோசிக்கின்றீங்க.? உண்டனே ஸ்வீட்கானா.காம் இணையதளத்திற்கு சென்று கலப்படம் இல்லாத பசு மாட்டினால் செய்யப்படும் இந்த ருசிமிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவினை வாங்கி சுவைத்து அந்த சுவையிலே உங்கள் சொந்த மண்ணுக்கு ஒரு முறை சென்று வாருங்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications