தொடர் மழை... ஒட்டன்சத்திரத்தில் தக்காளி கிலோ ரூ.2க்கு விற்பனை... சென்னையில் ரூ.25 !
சென்னை: ஒட்டன்சத்திரத்தில் கிலோ 2 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி சென்னையில் ரூ. 25க்கு விற்கப் படுகிறது.
தமிழ்நாட்டில் பரவலாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. குறிப்பாக தக்காளி செடிகள் மழையால் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
செடியிலிருந்து பறிக்கப் பட்ட தக்காளிகளும் மார்க்கெட்டில் சரியான விலைக்கு போகாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தென்மாவட்ட தக்காளி விளைச்சல்...
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி, ஒட்டன்சத்திரம், ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் தக்காளி அதிகம் விளைகிறது. இதில் தென் மாவட்டங்களில் விளையும் தக்காளி அந்தந்த மாவட்டத்திலேயே விற்பனை செய்யப்படுகிறது. மீதியை கேரளாவுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

குறைந்த விலை...
அந்தவகையில், தற்போது ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு அதிக அளவு தக்காளி வரத்து உள்ளது. அனால், மழையால் பழங்கள் சீக்கிரம் அழுகி விடுவதால் அங்கு கிலோ 2 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

குப்பையில் கொட்டப் படுகிறது...
ஆனால், குறைந்த விலைக்கு விற்கப்பட்ட போதும் தக்காளி அதிகம் விற்கப் படுவதில்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதனால், அதிகப் படியான தக்காளிகள் குப்பையில் கொட்டப் படுகிறதாம்.

சென்னையில் அதிக விலை...
இதற்கிடையே, இதற்கு நேர்மாறாக சென்னையில் தக்காளி கிலோ 25 ரூபாய்க்கு விற்கப் படுகிறது. இந்தக் கூடுதல் விலைக்கும் மழையையே காரணமாகச் சொல்கிறார்கள் வியாபாரிகள்.

மழை தான் காரணம்...
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கிருஷ்ணகிரி, ஓசூர், ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்துதான் தக்காளி உள்பட அனைத்து காய்கறிகளும் வருகிறது. பெட்டிகளில் அடைத்து கொண்டு வரப்படும் தக்காளியில், நான்கில் ஒரு பங்கு அழுகி விடுவதாகவும், ஒட்டன்சத்திரம் தக்காளி சென்னைக்கு வருவதில்லை என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications