"திஹார் ரிட்டர்ன்" தினகரனுக்கு ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சுந்தர்ராஜ் ஆதரவு
திகார் சிறையிலிருந்து வெளியே வந்த டிடிவி தினகரனுக்கு ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சுந்தரராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தினகரனுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஜாமீன் பெற்று கடந்த சனிக்கிழமை சென்னை வந்தார். முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிலையில் அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் தன்னை நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கே உண்டு என்றும் தெரிவித்தார்.

தினகரன், சசிகலா ஆகியோரை கட்சி, ஆட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக தெரிவித்திருந்த அமைச்சர் ஜெயகுமாருக்கு செக் வைக்க தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் போர்க் கொடி உயர்த்தினர். இந்நிலையில் கூவத்தூரில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றாததால் அதிருப்தி அடைந்த எம்எல்ஏ-க்கள் தற்போது தினகரனுக்கு ஆதரவு அளித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தினகரனுக்கு ஏற்கெனவே 24 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ், உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி, திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன், மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான் உள்ளிட்டோரும் தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
தமிழக அரசியல் குறித்தும் எடப்பாடி அரசு குறித்தும் தனது ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சுந்தரராஜும் இன்று தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனால் அவருக்கு 33 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications