எங்களுடைய போராட்டமும் விவசாயிகளுடைய போராட்டமும் ஒன்றுதான்... தினகரன்
எங்களுடைய போராட்டமும், விவசாயிகளுடைய போராட்டமும் ஒன்றுதான் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தேனி: விவசாயத்தை காப்பதற்காக விவசாயிகள் போராடுவதை போல கட்சியை காப்பதற்காக நாங்கள் போராடி வருகிறோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தேனியில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பதவிக்காக அலைபவர்கள் நாங்கள் அல்ல. அதிமுக ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை.

ஓபிஎஸ்ஸுடன் சுயநலத்துக்காக சேர்த்து கொண்டனர். அவரும் பதவிக்காக யாசகம் மேற்கொண்டார். தர்மயுத்தம் எல்லாம் சும்மா. பதவிக்காக கூறியது. ஆனால் தற்போது தியாகத்துக்கும் துரோகத்துக்குமான யுத்தம் நடைபெறுகிறது.
அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் எங்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள். ஜெயலலிதா காலத்தில் கட்சி ராணுவ கட்டுப்பாடுடன் இருந்ததற்கு நாங்கள்தான் காரணம்.
ஒன்றரை கோடி தொண்டர்கள் இருந்த கட்சியில் விசுவாசமாக இருந்தவர்கள் யார் என்று ஜெயலலிதாவுக்கு அடையாளம் காட்டியவர்களும் நாங்கள்தான். விவசாயம் அழியக் கூடாது என்று விவசாயிகள் போராடுகின்றனர். அதேபோல் கட்சி அழிந்துவிடக் கூடாது என்பதற்காக நாங்கள் போராடுகிறோம் என்று தினகரன் தெரிவித்தார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications