பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சென்றார் ஓவியா? பரபரப்பு தகவல்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை ஓவியா மீண்டும் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் தொலைக் காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் நடிகை ஓவியா. தனது நேர்மையான நடத்தை வெளிப்படையான பேச்சு போன்றவற்றால் தமிழக ரசிகர்களின் நெஞ்சத்தில் நீங்காத இடம் பிடித்தார்.

ஆனால் காயத்ரி, ஜூலி, ஷக்தி உள்ளிட்ட சக போட்டியாளர்கள் ஓவியாவை எதிரியாகவே பார்த்தனர். ஜூலி, ஓவியா குறித்து இல்லாததையும் பொல்லாததையும் கூறி மற்றவர்கள் அவரை வெறுக்கும்படி செய்து விட்டார்.

தனிமைப்படுத்தப்பட்ட ஓவியா

தனிமைப்படுத்தப்பட்ட ஓவியா

ஜூலி கூறியது பொய் என நடிகர் கமல்ஹாசன் தோலுரித்துக் காட்டியும் ஜூலியின் பேச்சைதான் காயத்ரி, சக்தி உள்ளிட்ட சக குடும்ப உறுப்பினர்கள் நம்புகின்றனர். இதனால் ஓவியா பிக்பாஸ் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டார்.

காதலை மறுத்த ஆரவ்

காதலை மறுத்த ஆரவ்

இந்நிலையில் தனக்கு ஆதரவாகவும் தன்னிடம் அன்பாகவும் பேசிய ஆரவிடம் காதல் கொண்டார் ஓவியா. ஆனால் ஓவியாவிடம் நெருக்கமாக பழகிய ஆரவ் வார்த்தைகளில் படு அலர்ட்டாக இருந்து தான் ஓவியாவை காதலிக்கவில்லை என்றார்.

விரக்தியடைந்த ஓவியா

விரக்தியடைந்த ஓவியா

இதனால் பெரும் ஏமாற்றமடைந்தார் ஓவியா. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஓவியா, ஆரவ் ஏமாற்றியதால் விரக்தியடைந்தார்.

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

இதையடுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவதாக கூறிய ஓவியா நேற்றைய எபிசோடில் தற்கோலைக்கு முயன்றார். பின்னர் அவரது மேனேஜருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வெளியேறிய ஓவியா

வெளியேறிய ஓவியா

இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஓவியா. அவர் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

மீண்டும் பிக்பாஸில் ஓவியா

மீண்டும் பிக்பாஸில் ஓவியா

ஓவியா இல்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி பார்க்கப்போவதில்லை என ரசிகர்கள் வலைதளங்களில் குமுறினர். இதையடுத்து ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Oviya again participating in the Biggboss program sources said. Oviya committed suicide attempt yesterday. Then She left the Biggboss house.
Please Wait while comments are loading...