நான் பதில் சொல்லும் அளவுக்கு 'ப.சி.யும், கா.சி.'யும் ஒன்றும் பெரிய ஆட்கள் இல்லை: ஈவிகேஎஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் பதில் அளிக்கும் அளவுக்கு ப. சிதம்பரமும் ,அவரது மகனும் பெரிய ஆட்கள் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சனிக்கிழமை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சோனியா

சோனியா

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் பொருளாளர் மோதிலால் வோரா ஆகியோரை சந்தித்தேன். அந்த சந்திப்பின்போது கட்சியின் வளர்ச்சி பற்றி கலந்துரையாடினோம். அது குறித்து உங்களிடம் தெரிவிப்பதற்கு ஒன்றும் இல்லை. தேர்தல் கூட்டணி பற்றி பேசவில்லை.

சிதம்பரம்

சிதம்பரம்

ப. சிதம்பரத்திற்கும், அவரது மகன் கார்த்திக்கும் நான் பதில் அளிக்கப் போவது இல்லை. நான் பதில் அளிக்கும் அளவுக்கு அவர்கள் ஒன்றும் பெரிய ஆட்கள் இல்லை. இது குறித்து கட்சி தலைமையிடமும் பேச வேண்டியது இல்லை.

ஆவணங்கள்

ஆவணங்கள்

மத்திய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் திருடு போயுள்ளது என்றும், அதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மன்மோகன் சிங்

மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஆவணங்கள் மாயமாகியபோது அவர் உடனே பதவி விலக வேண்டும் என பாஜக தெரிவித்தது. தற்போது மத்திய அரசு ஆவணங்கள் திருடு போயுள்ளதால் முன்மாதிரியாக மோடி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மோடி தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார் இளங்கோவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+