சொந்த தொகுதியில் ப.சி. கூட்டத்துக்கு வந்தது வெறும் 10 பேர்: பாதுகாப்புக்கோ 100 பேர்

ஏப்ரல் 24ம் தேதி தமிழகத்தில் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்க முட்டி மோதியது. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இதையடுத்து தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. அந்த கட்சி வேட்பாளர்களை கூட அறிவிக்காத நிலையில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் பிரச்சாரத்தை துவங்கிவிட்டார். அப்பாவுடன் சேர்ந்து மகன் கார்த்தி சிதம்பரமும் பிரச்சாரம் செய்கிறார்.
சிவகங்கை தொகுதியில் உள்ள ஆலங்குடியில் சிதம்பரம் தனது பிரச்சாரத்தை துவங்கினார்.
அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில் அவர் காங்கிரஸ் வேட்பாளர் என்று கூறியபோது கார்த்தி மக்களை பார்த்து கும்பிடு போட்டார். அவர் கும்பிடு போட்டதை பார்த்தால் அவர் தான் சிவகங்கை தொகுதி வேட்பாளரோ என்று நினைக்கத் தோன்றியது. ஆனால் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியோ சிவகங்கை தொகுதியில் நிற்க கார்த்திக்கு டிக்கெட் தர மறுத்துவிட்டதாகவல்லவா கூறப்பட்டது.
சிதம்பரம் பேசிய இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 10 தான். ஆனால் இக்கூட்டத்தில் பாதுகாப்பு அளிக்க வந்த போலீசாரின் எண்ணிக்கையோ 100 ஆகும். ஆக பேச்சை கேட்க வந்தவர்களை விட பாதுகாப்பு அளிக்க வந்தவர்கள் தான் அதிகம்.
சிதம்பரத்தின் சொந்த தொகுதியான சிவகங்கையிலேயே அவருக்கு இந்த நிலைமை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications