எனது வீட்டு சமையலறை, படுக்கையறையிலும் அமலாக்கத்துறை சோதனை: ப.சிதம்பரம்
சென்னை, டெல்லியில் நடந்த அமலாக்கத்துறையின் சோதனை திட்டமிட்ட நாடகம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

டெல்லி : சென்னை, டெல்லியில் நடந்த அமலாக்கத்துறையின் சோதனை திட்டமிட்ட நாடகம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்படாமல் அமலாக்கத்துறையின் சோதனை நடைபெற்றதாகவும் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் டெல்லியில் உள்ள ப. சிதம்பரத்தின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் இன்று காலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திலேயே இந்த சோதனையானது முடிந்தது.
இந்நிலையில் அமலாக்கத்துறையின் சோதனை குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம் கூறியதாவது : ஏர்செல் மேக்சிஸ் வழக்கு எப்போதோ தொடரப்பட்டது, நேற்று நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது
வழக்கில் தொடர்புடையவர்கள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஜனவரி 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கிய சாராம்சமே இது வரை போலீசாரோ, சிபிஐயோ எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யவில்லை.

அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது
குற்றம் புரிந்ததற்கான எந்த வழக்கும் சிபிஐ உள்ளிட்ட எந்த அமைப்பாலும் தொடரப்பட வில்லை. எனவே வழக்கே பதிவு செய்யாத நிலையில், சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை.

எதிர்ப்பை பதிவு செய்தேன்
அமலாக்கத்துறை திட்டமிட்டே இந்த நாடகத்தை நடத்தியுள்ளது. சென்னையில் இன்று கார்த்தி சிதம்பரம் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர், சோதனை நடத்துவதை பற்றி எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனாலும் இது சரியான நடைமுறை இல்லை என்று என்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளேன்.

ஆவணங்கள் கைப்பற்றவில்லை
என்னுடைய வீட்டில் சமையலறை, படுக்கையறை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். எந்த ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றவில்லை என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications