எங்களை வஞ்சித்து, உரிமைகளை கபளீகரம் செய்துவிட்டார் சசிகலா.. பி.ஹெச் பாண்டியன்
எங்களை வஞ்சித்து, உரிமைகளை கபளீகரம் செய்துவிட்டார் சசிகலா என்று பி. ஹெச் பாண்டியன், சசிகலா மீது குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை; ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் 2 மாதத்திற்கு பின்னர் இன்று மவுனம் கலைத்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் சபாநாயகர் பி. ஹெச். பாண்டியன், எங்களை வஞ்சித்து, உரிமைகளை கபளீகரம் செய்துவிட்டார் சசிகலா என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் பி.ஹெச். பாண்டியன் கூறியதாவது:

எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுகவில் பொதுச் செயலாளர், பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்க முடியாது. அப்படி கட்சியின் சட்டத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதனை மாற்றவோ, திருத்தவோ கூட முடியாது. அப்படி இருக்கும் நிலையில், எங்களை வஞ்சித்து, உரிமைகளை கபளீகரம் செய்துள்ளார் சசிகலா.
இதனை நான் எதிர்க்கிறேன். இதற்காகத்தான் உங்களை எல்லாம் சந்தித்து உண்மைகளை சொல்கிறேன். அதிமுகவின் சட்டதிட்டங்கள், அதன் வரலாறு யாருக்கும் தெரியாது. அது தெரிந்தவர்கள் எல்லாம் மறைந்துவிட்டார்கள். அதனால்தான் நடராஜன் போன்றவர்கள் தைரியமாக செயல்படுகிறார்கள்.
முதல்வர் பதவியும், பொதுச் செயலாளர் பதவியும் சசிகலா ஏற்க தகுதி இல்லாதவர். மிடாஸ் மதுபான நிறுவனத்தில் சசிகலாவின் உறவினர்கள் அத்தனை பேரும் பங்குதாரர்கள். 17 ஆயிரம் கோடி ரூபாய் ஆண்டுக்கு வருமானம் வருகிறது. இதுபோன்ற பின்னணி கொண்டவர் சசிகலா முதல்வர் ஆகும் தகுதி இல்லாதவர் என்று காட்டமாக கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications