காவிரிக்காக தஞ்சையில் உண்ணாவிரதம் நடத்த வருவாரா ரஜினிகாந்த்.. பி.ஆர். பாண்டியன் பலே கேள்வி
காவிரி நதி நீரைப் பெற்றுத் தர தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த நடிகர் ரஜினிகாந்த் வருவாரா என்ற விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
5 நாட்களாக 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து வந்த அவர், கடைசி நாளில் உரையில், அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் திறமையான தலைவர்கள் இருந்தும் பயனில்லை என்றும் ரஜினி பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது.

கண்டனம்
இந்நிலையில், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியனும் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் குறித்து விமர்சனம் செய்துள்ளார். இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தைப் புறக்கணித்து வருகிறது என்று கூறினார்.

காவிரி பிரச்சனை
மேலும், தமிழகத்துக்கு காவிரி பிரச்னையில், மத்திய அரசு தொடர்ந்து துரோகமிழைத்ததால் 400 விவசாயிகள் தற்கொலை, அதிர்ச்சி மரணமடைந்துள்ளனர். காவிரியில் இருந்து 2,000 கன அடி தண்ணீரை விடுவிக்க, உச்ச நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும், மத்திய அரசு பெற்று தர மறுத்து விட்டது என்று பி. ஆர். பாண்டியன் குற்றம்சாட்டினார்.

உண்ணாவிரதப் போராட்டம்
தமிழக விவசாயிகள், விவசாயத்தை இழந்து அகதிகளாக வெளியேறும் பேராபத்து ஏற்பட்டுள்ளதை கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும், குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 1 முதல் 5 ஆம் தேதி வரை தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம் என்று பாண்டியன் தெரிவித்தார்.

ரஜினிக்கு எதிர்ப்பு
அப்போது, ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பாக பி. ஆர். பாண்டியன் கேள்வி எழுப்பியதோடு கண்டனமும் தெரிவித்தார். காவிரி பிரச்சனைக்காக தஞ்சையில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினிகாந்த் பங்கேற்க தயாரா என்றும் பி. பாண்டியன் கேள்வி எழுப்பினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications