அய்யாக்கண்ணு மீதான தாக்குதலை கண்டிக்கிறேன்... பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை!
அய்யாக்கண்ணு மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை : நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மீதான பாஜக பெண் நிர்வாகியின் தாக்குதல் கண்டனத்திற்குரியது என்று காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அய்யாக்கண்ணுவை தாக்கிய பெண் மீது அரசு வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளதாவது : தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு விவசாயிகள் கோரிக்கைகளை முன்வைத்து மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது குமரி முதல் கோட்டை வரை நடை பயண பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அவரது கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து நிறைவேற்ற வேண்டிய பிரதமர் மோடி பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் மூலம் அவதூறு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அய்யாகண்ணு மீது தூத்துக்குடி மாவட்ட பாஜக மகளிரணி தலைவர் நெல்லையம்மாள் தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது.
இத்தாக்குதலானது பாஜக தலைமை திட்டமிட்டு ஒரு பெண்ணை விட்டு தாக்குதல் நடத்தியிருப்பது வெட்ககேடானதும் பிற்போக்கு தனமானது ஆகும். விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நாட்டை ஆளும் கட்சிக்கு இல்லையே என்பது வேதனையளிக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளை அவமானப்படுத்தும் செயலாகும்.
பா.ஜ.க தொடர்ந்து அமைதியான தமிழகத்தை கலவர பூமியாக மாற்றி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது கீழ்தரமான செயல் ஆகும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யாக்கண்ணு வயது முதிர்வை கூட பொருட்படுத்தாமல் பொது இடத்தில் ஆன்மீக தளத்தில் தாக்குதல் நடத்திய நெல்லையம்மாள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்திட வேண்டும் என்றும் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications