காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்- ஸ்டாலின் கண்டனம்- டெல்லி உதவி எண்கள்-பஹல்காம் செல்லும் தமிழக அதிகாரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தை காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் தைழ்நாடு அரசின் உதவி மையத்தை தொடர்பு கொள்ள உதவி எண்கள்: 011-24193300, 9289516712 ஆகியவையும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ்நாடு, கர்நாடகாவை சேர்ந்த 12 பேர் படுகாயமடைந்தனர்.

MKs1

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் ஹெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் படுகொலைஒ செய்யப்பட்டுள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்லனர். விலை மதிப்பற்ற உயிர்களை காவு கொண்டஅதிர்ச்சிக்குள்ளாக்கும் தாக்குதல் சம்பவம் இது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது மிகுந்த கவலையளிக்கிறது.

டெல்லி தமிழ்நாடு இல்ல அதிகாரிகள், ஜம்மு காஷ்மீர் அரசுடன் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்யும் என உறுதியளிக்கிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில், "ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்தக் கொடூர செயலின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்... அவர்கள் தப்ப முடியாது! அவர்களின் தீய எண்ணம் ஒருபோதும் வெற்றி பெறாது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நமது தீர்மானம் அசைக்க முடியாதது, அது மேலும் வலுவடையும் என பதிவிட்டுள்ளார்.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமது எக்ஸ் பக்கத்தில், ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது; இத்தகைய பயங்கரவாத செயல்களுக்கு எதிராக நாடு ஒருங்கிணைந்து நிற்கிறது; மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தமது எக்ஸ் பக்கத்தில், காஷ்மீரில் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடைபெற்றுள்ள கொடூர தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமைதி திரும்பிய காஷ்மீரில், சுற்றுலா பயணிகள் மீது பொது வெளியில் நடைபெற்றுள்ள படுகொலைகள் பொது மக்களை அச்சுறுத்த நடந்த கோழைகளின் முயற்சி. மத்திய அரசின் கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக அடங்கிக்கிடந்த இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் மீண்டும் காஷ்மீரின் அமைதியை குலைக்க நடத்தியுள்ள முயற்சியை முறியடிப்போம். காஷ்மீரை காப்பதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரையும் விரைவில் மீட்போம் என பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் உதவி மையம்

ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு புதுடில்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பஹல்காம் செல்லும் தமிழ்நாடு அரசு அதிகாரி

மேலும் புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.அப்தாப் ரசூல், இ.ஆ.ப., அவர்களை நேரடியாக ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதிக்குச் சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+