பாக்.கிலிருந்து 6 தீவிரவாதிகள்.. இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுறுவ திட்டம்?
நாகர்கோவில்: பாகிஸ்தானைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி பெரும் நாச வேலையில் ஈடுபட முயன்று வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இவர்கள் தங்களது ஊடுறுவலுக்கு தமிழக மீனவர்களின் படகுகளைப் பயன்படுத்தலாம் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளதாம்.
இதையடுத்து தமிழக கடலோரப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

6 பேர்
பாகிஸ்தானில் தீவிரவாதப் பயிற்சி பெற்ற 6 பேர் தற்போது இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் ஊடுறுவக் காத்துள்ளனராம்.

கடல் மார்க்கமாக
இலங்கையிலிருந்து படகுகள் மூலமாக இவர்கள் ஊடுறுவத் திட்டமிட்டுள்ளனராம்.

தமிழகத்திற்கு குறி
தமிழகத்திற்குள் ஊடுறுவிய பின்னர் தமிழகத்தில் பெரும் நாச வேலையில் ஈடுபடுவதே இவர்களின் திட்டம் என்று கூறப்படுகிறது.

கடலோரக் கண்காணிப்பு அதிகரிப்பு
உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழக கடலோரப் பகுதிகளில் போலீஸார் கண்காணிப்பையும், சோதனையையும் அதிகரித்துள்ளனர்.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள கடற்கரை கிராமங்களில் நள்ளிரவு முதல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறப்புச் சோதனைச் சாவடிகள்
கன்னியாகுமரி, சின்னமுட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, முட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதலாக சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, கடற்கரை கிராமங்களுக்குள் சென்று திரும்பும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

குமரியில் பலத்த பாதுகாப்பு
சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications