தனித்தமிழ் ஈழம் அமைய உதவுவேன்: ஜெயலலிதாவிற்கு பழ. நெடுமாறன் பாராட்டு
சென்னை: தனித்தமிழ் ஈழம் அமைவதற்கும், தமிழர்கள் முழுமையான சுதந்திரத்துடனும், தன்மானத்துடனும் வாழ்வதற்கும் தொடர்ந்து பாடுபடப் போவதாகக் ஜெயலலிதா கூறியிருப்பதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்சியில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, "தனித்தமிழ் ஈழம் அமைவதற்கும், அங்கு தமிழர்கள் முழுமையான சுதந்திரத்துடனும், தன்மானத்துடனும் வாழ்வதற்கும் தான் தொடர்ந்து பாடுபடப் போவதாகக் கூறியிருப்பதை மனமாற வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

மேலும் அவர் பேசுகையில்.. தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதின் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிகாண முடியும் என்பதுதான் தனது அரசின் நிலைப்பாடாகும் என்று கூறியிருப்பதையும், இலங்கையில் முற்றிலும் அமைதி நிலவி தமிழர்களுக்குப் பாதுகாப்பு நிலவும் சூழ்நிலை உருவானால்தான் தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளை அங்கு திருப்பி அனுப்பவேண்டும் என்பதுதான் தனது அரசின் நிலைப்பாடு என்று அறிவித்திருப்பதையும் தமிழர்கள் அனைவரும் வரவேற்றுப் பாராட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறு பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications