பாளையங்கோட்டை பாஜக பிரமுகர் கொலை.. காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
நெல்லை: பாளையங்கோட்டையில் பாஜக பிரமுகர் கொலையை தடுக்க தவறியதால் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டை அருகே மூளிக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் பாண்டியன். இவர் பாஜக மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் ஜெகன் நேற்று முன் தினம் இரவு தனது பைக்கில் பாளையங்கோட்டையில் இருந்து மூளிக்குளம் சென்றார்.

அங்குள்ள சுடலை மாட சுவாமி கோயில் அருகே உள்ள வாய்க்கால் பாலத்தில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்களால் சரமாரியாக ஜெகன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 3 பைக்குளில் வந்த 6 பேர் திடீரென ஜெகனை சுற்றி வளைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர்.
இதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். மூளிக்குளம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் பிரபுதான் கொலைக்கு மூல காரணம் என சொல்லப்படுகிறது.
மேலும் அவரை கைது செய்ய வேண்டும் என ஜெகனின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஜெகனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். உயிரிழந்த பாஜக பிரமுகர் கொலை வழக்கில் அனிஷ், பாஸ்கர், சந்துரு, அஜித், விக்கி, வசந்த் ஆகிய 6 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திமுக பிரமுகர் பிரபு உள்ளிட்ட 5 பேரை தனிப்டை போலீஸார் தேடி வந்தனர். 3 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் தனிப்படை போலீஸார் நெல்லை மாவட்டத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற மூளிக்குளம் பிரபுவை கைது செய்துள்ளனர். இதுவரை இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜெகனின் கொலையை தடுக்க தவறியதாக பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் காசி பாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பாளையங்கோட்டை காவல் துறை ஆணையர் பிறப்பித்தார்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்!












Click it and Unblock the Notifications