டிவி பார்த்ததைக் கண்டித்த தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது
திருப்பூர்: பல்லடம் அருகே டி.வி. பார்த்ததை கண்டித்ததால் தந்தையை அடித்துக்கொன்ற மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பரமசிவம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (60). விசைத்தறி அதிபரான இவரது 28 வயது மனநிலை பாதிக்கப் பட்ட மகன் வேலுச்சாமி.
வேலுச்சாமி கடந்த 2010-ம் ஆண்டு தனது தாயார் சுப்புலட்சுமியை அரிவாளால் வெட்டிக் கொன்றார். கொலை வழக்கில் கைதான அவர் கடந்த ஆண்டுதான் விடுதலையானார். எனவே, தந்தையும், மகனும் மட்டும் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு 10 மணி அளவில் வேலுச்சாமி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது டிவியை அணைத்து விட்டு தூங்கச் சொல்லி இருக்கிறார் சின்னச்சாமி. ஆனால், அதனைக் கேட்காமல் தொடர்ந்து டிவி பார்த்துள்ளார் வேலுச்சாமி.
இரவு 11 மணி அளவில் மீண்டும் மகனைக் கண்டித்துள்ளார் சின்னச்சாமி. இதனால் தந்தை, மகன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் அருகில் இருந்த பாவுநூல் கட்டையால் தந்தையின் தலையில் அடித்துள்ளார் வேலுச்சாமி. இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார் சின்னச்சாமி.
பின்னர் மீண்டும் ஒன்றுமே நடக்காதது போல் தொடர்ந்து டிவி பார்த்துள்ளார் வேலுச்சாமி. வெகுநேரமாக சின்னச்சாமி வீட்டில் டி.வி. ஓடிக்கொண்டிருக்கிறதே என்ற சந்தேகத்தில் வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர் கையில் ரத்தக்கறை படிந்த பாவுநூல் கட்டையுடன் வேலுச்சாமி நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆம்புலன்சில் கோவை அரசு மருத்துவமனைக்கு சின்னச்சாமியை அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
உடனடியாக இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. விரைந்து வந்த போலீசார் வேலுச்சாமியைக் கைது செய்தனர்.
டிவி பார்க்கும் தகராறில் பெற்ற மகனே தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications